பேரறிவாளனின் வழக்கறிஞர்களின்
ஆற்றல் மிக்க வாதத் திறமை!
---------------------------------------------------------------------
ராஜீவ் காந்தி கொலை வழக்கால் அதிகம்
சம்பாதித்தவர்கள் யார் என்றால்
ஆற்றல் மிக்க வாதத் திறமை!
---------------------------------------------------------------------
ராஜீவ் காந்தி கொலை வழக்கால் அதிகம்
சம்பாதித்தவர்கள் யார் என்றால்
வழக்கறிஞர்கள் தான்
என்று உறுதியாகக் கூறலாம்.
பேரறிவாளனுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில்
தடா நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும்
மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கைகளில்
அவருக்கு ஆலோசனை வழங்க, சிறையில் சென்று
அடிக்கடி அவரைச் சந்தித்துத் தகவல்களைப் பெற,
ஆவணங்களில் கையெழுத்துப்பெற என்று பல்வேறு
செயல்பாடுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள்
அவருக்காகப் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஏ. தொல்காப்பியன் முதல், ராம் ஜெத்மலானி வரை
பலரையும் குறிப்பிட முடியும்.அவர்கள் அனைவரின்
பட்டியலை எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.
குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை
வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம் 1998இல்.
மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கு
(நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்) மட்டும்
மரண தண்டனை 1999 மே 11இல் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு (appeal) மற்றும்
மறுபரிசீலனை (REVIEW) வழக்கின்போது,
பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் சார்பாக, திரு நடராசன் (உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) வாதாடினார்.
இதில் தீர்ப்பு அக்டோபர் 8, 1999 அன்று வெளிவந்தது.
நால்வரின் மரண தண்டனையை இந்தத் தீர்ப்பு
உறுதி செய்தது.
என்றாலும், மே 11 தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட
26 பேர் மீதான தடா சட்டப் பிரிவுகளின் மீதான
குற்றங்கள் (3(3), 3(4) மற்றும் 5) நிரூபிக்கப்படவில்லை
என்று நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
மூத்த வழக்கறிஞர் நடராசன் அவர்களின் வாதத்
திறமைக்குச் சான்றாக இது அமைந்துள்ளது
என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ராஜீவ் கொலையும் சரி, கொலை வழக்கும் சரி,
தொடக்கம் முதலே கோடிக்கணக்கில் பணம் புழங்கும்
விவகாரம் ஆகும். தொடக்கம் முதல் இன்று வரை
மட்டுமல்ல, இனிமேலும், இந்த ஒட்டுமொத்த
விவகாரத்தில் வெளிநாட்டினரின் பங்கும்
பங்களிப்பும் பணமும் இருக்கின்றன.
ராஜீவ் கொலைக்காகக் கண்ணீர் வடித்த தமிழக
மக்களும், ராஜீவ் கொலையாளிகளுக்காகக்
கண்ணீர் வடிக்கும் பாமரர்களும் இந்த உண்மையை
அறிய மாட்டார்கள்.
கர்நாடகத்தில் பெல்காம் சிறையில் உள்ள வீரப்பனின்
கூட்டாளிகள் நால்வர் ஆயுள் தண்டனை அனுபவித்து
வருகின்றனர். ஒரு வெடிகுண்டு வழக்கில் இந்த
நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப் பட்டது.
பின்னர் உச்சநீதிமன்றம் அவர்களின் மரண
தண்டனையை ஆயுளாகக் குறைத்தது. உண்மையில்
இவர்கள் நிரபராதிகளே.
இவர்களை, இந்த நான்கு தமிழர்களை விடுதலை
செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்க ஒருவர்
கூட முன்வரவில்லை. ஏன்? குரல் கொடுக்கும்
போராளிகளுக்குப் பணம் கொடுக்க இந்த
நால்வரிடமும் பணம் இல்லை. அவர்களுக்கு
எந்த வெளிநாட்டுத் தொடர்பும் இல்லை.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக