செவ்வாய், 21 ஜூன், 2016

"ராமனும் சீதையும் காட்டுக்குச் சென்றார்கள். அங்கு
காட்டில் சீதை தங்குவதற்காக, லட்சுமணன்
பர்ணசாலை அமைத்தான்."-------1960களில் பாடப்
புத்தகங்களில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கும்.
"பர்ண" என்ற சமஸ்கிருதத் சொல்லுக்கு இலை, தழை
என்று பொருள். இலை தழையால் அமைத்த குடில்
பர்ணசாலை. அதாவது தமிழில் இலைக்குடில்.
( பாடசாலை, கலாசாலை போன்றது பர்ணசாலை.
அது ரோடு அல்ல).

"பர்ண"என்ற சொல்லில் இருந்து அபர்ணா என்ற
சொல் தோன்றியது. இது மலைமகளான பார்வதியின்
பெயர். இலைக்குடிலில் வாழாதவள் என்று பொருள்.
ஆடு மாடுகள் போல் இலை தழைகளை உண்ணாதவள்
என்று பொருள். அபர்ணா (பார்வதி) ஹிமவானின் மகள்.
அதாவது மலையரசனின் மகள். அவள் ஏன் அஃறிணை
உயிர்களை போல் இலை தழைகளை உண்ண வேண்டும்?
எனவே, அபர்ணா என்பது காரணப் பெயர்; இடுகுறி அன்று.    


இலக்கியம் என்பதில் கற்பனைக்குப் பெரிதும்
இடமுண்டு. இலக்கியம் என்பது காவல்துறையினர்
தயாரிக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) போன்றதல்ல.
எனவே, "பார்வதி கனியைக் கூட உண்ணாமல்
இருந்தாள் என்றால் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால்
இலையை (கீரையை) கூட உண்ணாமல் இருந்தாள்"
என்பதை ஏற்க இயலவில்லை என்று கூறுவது
இலக்கியத்தை அளக்கும் முறைமை அல்ல.
**
அபர்ணா என்று பெயர் வைப்பவர்கள் அபர்ணா
குறித்து சமூகத்தில் நிலவும் நம்பிக்கை. கருத்துக்களின்
அடிப்படையில்தான் பெயர் வைக்கிறார்கள். ஒரு
மொழியியல் அறிஞரையோ வரலாற்று அறிஞரையோ
கலந்து ஆலோசித்து, அதன் பிறகு முடிவெடுத்து,
பெயர் வைப்பதில்லை. இதுதான் வாழ்வின் யதார்த்தம்.
**
எனவே, வலிந்து பொருள் கொள்கிறார்கள் என்ற
பேச்சுக்கே இடமில்லை. 


யோகா குறித்த தளபதி ஸ்டாலின் அவர்களின்
கருத்துக்களும் , நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கருத்துக்களும் ஒன்றே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக