ஞாயிறு, 26 ஜூன், 2016

9 என்ற எண்ணுக்குரிய சொல்லை தமிழன்
தொலைத்து விட்டான். எனவே 90 என்ற எண்ணுக்குரிய
ஒன்பது என்ற சொல்லை எடுத்து 9க்குத் தந்தான்.
இப்போது 90 என்ற எண்ணுக்கு சொல் இல்லை.
எனவே மேலடுக்கில் இருந்த 900 என்ற எண்ணுக்குரிய
சொல்லான தொண்ணூறு  என்ற சொல்லை
எடுத்து 90க்குத்  தந்தான்.
**
இப்போது   900 என்ற எண்ணுக்குச் சொல் இல்லை.
எனவே 9000 என்ற எண்ணுக்குரிய சொல்லான
தொள்ளாயிரம் என்ற சொல்லை 900க்குத் தந்தான்.
**
இது பாவாணர் கருத்து.
**
70= எழுபது; 80= எண்பது ; எனவே 90= ஒன்பது.
இப்படித்தான் ஆதிகாலத்தில் இருந்தது. 
**
700= எழுநூறு; 800= எண்ணூறு; 900= தொண்ணூறு.
இப்படித்தான் ஆதியில் இருந்தது.
**
7000= ஏழாயிரம்; 8000= எண்ணாயிரம்;
9000= தொள்ளாயிரம். இப்படித்தான் ஆதியில்
இருந்தது.   

இக்கருத்தை பாவாணர் ஏற்கவில்லை.

பாவாணர் கூறியதை நான் அப்படியே ஏற்றுக்
கொண்டேன். பரிசீலித்துப் பார்த்ததில் அது
சரி என்று புலப்பட்டது. என்னுடைய ஆசிரியர்களும்
அதையே விளக்கினார்கள். மற்றப்படி, பாவாணர்
கூறியது குறித்து எதிர்க்கருத்துக் கூறவோ
ஆதாரம் கேட்கவோ என் சிந்தையில் இடமில்லை.
மேலும்  நான் இப்பொருளில் ஆய்வு எதுவும்
மேற்கொள்ளவில்லை.

நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில்
பாவாணர் கூறியது சரியே என்று புலப்பட்டது.
அறுபது, எழுபது, எண்பது என்ற வரிசையில்
அடுத்து ஒன்பது என்றுதானே வர வேண்டும்.
எங்கிருந்து தொண்ணூறு வந்தது? தொள் +நூறு=
தொண்ணூறு (குறைந்த நூறு) என்ற கருத்தைப்
பாவாணர் ஏற்கவில்லை.
**
தொட்டு என்ற சொல்லை 9க்குரிய சொல்லாக
நான் வரித்துக் கொண்டேன். இதை பாவாணர்
கூறியதாக நினைவில்லை. எனவே தவறு இருந்தால்
அது என்னைச் சாரும். பாவாணரைச் சாராது. 

பாவாணர் கூறியதை என் கல்லூரிக் காலத்திலேயே
ஏற்றுக் கொண்டேன். இன்று நேற்று ஏற்றுக்
கொண்டதன்று இது. அது  என் சிந்தையில்
உறைந்து விட்டது. மேலும் இந்தக் குறைபாட்டை
நீக்க வேண்டும் என்று கருதினேன். எனவே 9க்கு
உரிய சொல்லாக தொட்டு என்று கொண்டேன்.
தர்க்கப்பிழை உள்ளதா?

9, 90, 900 ஆகிய எண்களுக்கு உரிய சொற்கள்
(ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்)
தமிழின் எண்களுக்கான பெயர்களில் ஒரு
சமச்சீர்மை குலைவு (Symmetry breaking) ஏற்பட்டு
உள்ளதைக் காட்டுகின்றன. இந்த சீர்மைக்குலைவை
உணராத அல்லது ஏற்க மறுத்த தமிழறிஞர்கள்
தொண்ணூறு (குறைந்த நூறு), தொள்ளாயிரம்
(குறைந்த ஆயிரம்) என்று சப்பைக் கட்டு
கட்டினார்கள். பாவாணர் மட்டுமே இந்த
சீரமைக்க குலைவைக் கண்டறிந்து சொன்னவர்.
அதில் உள்ள தர்க்கம் எனக்கு ஏற்புடைத்தாக இருந்தது.
   
1) பாவாணர் கூறியதும்  2) அதை என் அறிவுக்கு எட்டிய
விதத்தில் சிந்தித்து ஏற்றதும் காரணங்கள். பாவாணர்
அடித்துக் கூறுகிறார். ஒன்பது என்ற சொல் மூலச்
சொல்லன்று. வேறு ஒரு சொல் இருந்தது என்று
பாவாணர் கூறுகிறார். இப்போது அந்தப் புத்தகம்
என்னிடம் இல்லை. 

9 என்ற எண்ணுக்குரிய மூலச் சொல்லை (original)
தமிழன் தொலைத்து விட்டான். எனவே மேலடுக்கில்
இருந்த ஒன்பது என்ற சொல்லை (இது 10 களின் பெயர்
வரிசையில் 90க்கானது) எடுத்து 9க்கு உரிய
சொல்லாக ஆக்கிக் கொண்டான் என்கிறாரே
பாவாணர். சமச்சீர்மை ஒவ்வொரு இடத்திலும்
குலைவதை நான் பரிசீலித்து உணர்ந்தேன்.


நான் இதில் விடாப்பிடியாக இல்லை. இருக்கவும்
விரும்பவில்லை. ஜான் ரூபர்ட் கேட்டதால்
விளக்கம் அளித்தேன். எது சாத்தியமோ அப்படிச்
செய்து கொள்ளுங்கள். எனக்கு எவ்வித ஆட்சேபமும்
கிடையாது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக