புதன், 22 ஜூன், 2016

உண்மையில் வர்ஷினி சிறப்புப் பிரிவினருக்கான
கலந்தாய்வில் பங்கு பெறாமல், பொதுப் பிரிவுக்குரிய
(திறந்த போட்டி) கலந்தாய்வில் பங்கு பெற்றதால்
ஆதாயம் அடைந்தது யார்? ஜனனி அல்ல. குறைவான
மதிப்பெண்ணும் குறைவான RANKம் எடுத்த  இன்னொரு
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதான். இதுதான்
உண்மை.இந்து ஏட்டு ஊடக முட்டாளுக்கு இது
மண்டையில் உறைக்கவில்லை.
----------------------------------------------------------------

வர்ஷினியின் முடிவால் ஆதாயம் அடைந்தது
கடைசி RANKஇல் உள்ள பிற்பட்ட வகுப்பு மாணவனே!
---------------------------------------------------------------------------------------------------
முன்னாள்  ராணுவத்தினர் குழந்தைகளுக்கான சிறப்பு
ஒதுக்கீட்டில் 40 BC மாணவர்களுக்கு இடம் வழங்கப்
படுகிறது என்று வைத்துக் கொள்வோம். BC க்குரிய
மொத்த இடங்களான 27 சதம் இடங்களில் இந்த
40 இடங்களும் கழித்துக் கொள்ளப் படும். (BC =27 சதம்
மற்றும் BC முஸ்லிம்= 3 சதம்; ஆக மொத்தம் 30 சதம்).
**
இப்போது யோசித்துப் பாருங்கள். வர்ஷினி சிறப்புப்
பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கு  பெற்று இடம்
பெற்றிருந்தால் என்ன ஆகும்? அவருக்கு ஒதுக்கப்பட்ட
இடம் BC க்குரிய மொத்த இடங்களில் கழித்துக்
கொள்ளப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது வர்ஷினி
பொதுப்பிரிவினருக்கான திறந்த போட்டியில்
பங்கு பெற்று இடம் பெற்றதால், அவரால் BCக்குரிய
இடம் குறையாமல், அப்படியே இருக்கும். அதாவது
வர்ஷினியின் முடிவால் இடம் கிடைக்காமல் போய்
இருக்கக் கூடிய யாரோ ஒரு BC மாணவன் அல்லது
மாணவி இப்போது இடம் கிடைக்கப் பெறுகிறான்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக