வியாழன், 23 ஜூன், 2016

அன்று சவுண்டிப்  பார்ப்பான் சொன்னான்!
இன்று போலி முற்போக்குச் சூத்திரன் சொல்கிறான்!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
கல்வி கற்காத மூடர்களைப் பார்த்து "குருட்டு நாய்கள்"
என்று திட்டினான் வள்ளுவன். "கண்ணுடையர் என்பர்
கற்றோர்" .

இவ்வளவு திட்டியும் கோபம் தணியாத வள்ளுவன்
படிக்காத முட்டாள்களை மிருகம் என்று மேலும்
திட்டுகிறான்.
"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
 கற்றாரோ(டு) ஏனை யவர்".

இங்கு கற்றாரோடு என்ற சொல்லில் டு என்ற எழுத்து
ஏன் அடைப்புக்  குறிக்குள் இருக்கிறது? இது
பலருக்குத் தெரியாது. யாப்பமைதி குன்றாமல்
இருக்கும் பொருட்டு. யாப்பமைதி என்றால் என்ன?
விடை சொல்லிக் கொண்டே போனால் இந்தக்
கட்டுரையை நிறைவு செய்ய இயலாது. யாப்பமைதி
அறியாதோர் அடுத்த பிறவியில் அறியக் கடவர்!

அறியாமை நிரம்பிய மக்களைக் கொண்ட சமூகமே
ஆள்வதற்கு ஏற்றது என்கிறது சுரண்டல் தத்துவம்.
எனவேதான் அன்று பார்ப்பான் ஆண்டபோது,
"சூத்திர நாய்களே, நீங்கள் படிக்கக் கூடாது"
என்று சொன்னான்.

பார்ப்பான் அடித்து உதைக்கப் பட்டான். சூத்திரனும்
கற்கலாம் என்ற நிலை வந்தது. நிறையச் சூத்திரர்கள்
கற்றனர். கற்ற சூத்திரன் ஆளத் தலைப்பட்டான்.
இப்போது பார்ப்பான் கடைப்பிடித்த அதே சுரண்டல்
தத்துவத்தை இந்தச் சூத்திரன் கையில் எடுத்துக்
கொண்டான். மக்கள் கல்வி கற்று விட்டால் அவர்களை
ஆள்வது கடினமாகி விடும் என்று நினைக்கிறான்.
எனவே கல்விக்குத் தடை போடுகிறான்.

1) சூத்திரர்கள் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது
என்கிறான் இந்தச் சுரண்டல் சூத்திரன். அன்று
பார்ப்பான் என்ன சொன்னானோ அதை 
இவனும் சொல்கிறான்.

2) தமிழன் இந்தி படிக்கக் கூடாது என்கிறான்.
3) சிலப்பதிகாரம் படிக்காதே! கம்ப ராமாயணம்
படிக்காதே என்கிறான்.

4) காலந்தோறும் புதுப்பிக்கப் படும் பாடத்திட்டம்
உனக்கு எதற்கு? 25 ஆண்டுக்கு முந்திய பழைய
பாடத்திட்டத்தில் படித்தால் போதுமடா சூத்திரனே
என்கிறான்.

5) கணிதம், அறிவியல் என்றதும் தீயை மிதித்தது
போல் அலறுகிறான். கணிதம் படிக்காதே என்கிறான்.
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம் இந்த
நவீன சூத்திரன் விதிக்கும் தடைகளை.

இந்தக் கயவர்களுக்கு செருப்படி கொடுத்தார்
பாவேந்தர். படி படி சங்கத் தமிழ் நூலைப் படி
என்றார்.

இந்தக் கயவர்களுக்கு சூடு போட்டார் மறைமலை
அடிகள். சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கற்றார்.
காளிதாசனின் சமஸ்கிருத நாடகம் சாகுந்தலத்தைத்
தமிழில் இயற்றினார்.

காரல் மார்க்ஸை ஆழ்ந்து படித்தவர்கள் (இவ்வாறு
ஆழ்ந்து படித்தவர்கள் தமிழ்நாட்டில் ஓரிருவர்
மட்டுமே) ஷேக்ஸ்பியர் மீது மார்க்சுக்கு எவ்வளவு
தீவிரமான ஈடுபாடு என்பதை அறிவார்கள்.

ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல, கதே என்ற ஜெர்மானியக்
கவிஞர் மீதும் மார்க்ஸ் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

இதனால் யாம் யாப்புறுத்துவது என்னவெனில்,
படியுங்கள்! படியுங்கள்!! படிப்புக்குத் தடை
போடுவது மிருகத்தனம்! அந்த மிருகத்தனத்தை
நொறுக்கி ஆக வேண்டும். கண்டது கற்கப்
பண்டிதன் ஆவான் என்பது பழமொழி.

சார்பியல் கோட்பாடு முதல் சமஸ்கிருதம் வரை
படியுங்கள்!
குவான்டம் தியரி முதல் குறுந்தொகை வரை
படியுங்கள்!
கம்பன் முதல் கதே வரை படியுங்கள். தம்
காலத்து இலக்கியங்கள் யாவையும் ஆழ்ந்து
கற்று அவற்றைப் பரப்பியவர் காரல் மார்க்ஸ்
என்பதை நினைவு கூருங்கள்.

கல்விக்கு எதிராகக் கத்தியைத் தூக்கும்
போலிப்  பகுத்தறிவு நாய்களை  கல்லால்
அடித்துக் கொல்லுங்கள்!
**************************************************************
   








           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக