அறிவியல் வளர்ந்தது; அதனால் ஆத்திகம் தேய்ந்தது.
இங்கு அறிவியலும் வளரவில்லை. பொருள்முதல்வாதமும்
மக்களிடம் கொண்டுசெல்லப் படவில்லை. எனவே
நாத்திகம் கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டு இருக்கிறது.
பிரச்சாரம் என்பது ஒரு தொடக்கநிலைச் செயல்பாடு.
பிரச்சாரம் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும்
என்று மார்க்சியம் போதிக்கவில்லை. மார்க்சிய
நடைமுறையில், பிரச்சாரம் -கிளர்ச்சி என்ற பைனரி
முக்கியமானது. ajit-prop committees (agitation and propaganda)
மார்க்சிஸ்ட் கட்சிகளில் அமைக்கப் படுவது ஒரு
வழமையான நடைமுறை. இந்தியாவில் இன்னும்
அரை நிலப்பிரபுத்துவம் இருந்து வருவதால்
மதம் அரசு அதிகாரத்துடன் ஒரு வலுவான பிணைப்பைக்
கொண்டிருக்கும். இந்தப் பிணைப்பை மாற்ற
ஆளும் வர்க்கக் காட்சிகள் முயற்ச்சி செய்யாது.
எனவே பொருள்முதல்வாதப் பிரச்சாரமும்
கிளர்ச்சியும் இங்கு மற்ற நாட்டை விட அவசியம்.
இன்று இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இரு மொழிக்
கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மாநில நிர்வாகத்தில் தமிழ் ஆங்கிலம்
மட்டுமே. இந்தி சமஸ்கிருதத்திற்கு இடமில்லை.
CBSE எனப்படும் மத்திய பாடத்திட்டம் உள்ள
பள்ளிகளில் சமஸ்கிருதம் விருப்பப் பாடமாக
கற்பிக்கலாம் என்று மத்திய மோடி அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 60,000 பள்ளிகளில்
மத்திய பாடத்திட்டம் செயல்படும் பள்ளிகள் மிக
மிகக் குறைவே. சுமார் 600 பள்ளிகள் இருக்கும்.
அவ்வளவே.
**
இங்கு தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிஞர்
அண்ணா கொண்டு வந்த சட்டப்படி இருமொழிக்
கொள்கைதான். அதற்கு எந்த ஆபத்தும் இல்லை.
இதை மாற்ற மத்திய அரசால் முடியாது.
**
சமஸ்கிருதத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும்
தமிழ் தேசிய போலிகள் கூச்சல் போடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக