புதன், 22 ஜூன், 2016

1) மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு
என்பது 69 சதம் மட்டுமே. முன்னாள் ராணுவத்தினர்,
விளையாட்டு வீரர், உடல் ஊனமுற்றோர் ஆகிய
பிரிவினருக்குத் தனியாக இடஒதுக்கீடு கிடையாது.
நன்கு கவனிக்கவும்: தனியாக ஒதுக்கீடு கிடையாது.

2) இதன் பொருள் என்ன?  BC வகுப்பைச் சேர்ந்த
10 பேருக்கு ஊனமுற்றோர் என்ற முறையில்
இடம் அளித்தால், அந்த 10 இடங்களும் BC க்குரிய
மொத்த இடங்களில் கழித்துக் கொள்ளப்படும்.

3) தற்போது கவுன்சலிங் நடந்து கொண்டுள்ளது.
இன்றைய நிலவரம் TN Health Dept வெளியிட்டுள்ளது.
அதில் மீதியுள்ள காலியிடங்கள் வெளியிடப்
பட்டுள்ளன. அதில் வகுப்புவாரியான (OC, BC, MBC, SC, ST)
காலியிடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

4) ஊனமுற்றோருக்கு இத்தனை இடம், முன்னாள்
ராணுவத்தினருக்கு இத்தனை இடம் என்றெல்லாம்
என்றுமே அட்மிஷன் குழு கூறியதே இல்லை.
ஏனெனில் அப்படி ஒதுக்கீடு இல்லை.

5) எனவே, வர்ஷினி சிறப்புப் பிரிவு கலந்தாய்வில்
பங்கெடுத்தாலும், பொதுப்பிரிவு இடத்தையே  தேர்வு
செய்வார் என்பதெல்லாம் உலக மகா அபத்தம்.

6) ஆகவே, சிறப்புப் பிரிவு கலந்தாய்வில்
பங்கேற்காமல் விட்டதன் மூலம், வர்ஷினியால்
BCக்குரிய ஒரு இடம் மிச்சமாகி  இருக்கிறது
என்பது கண்கூடு. QED.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக