சனி, 18 ஜூன், 2016

அறிஞர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்
படுபவர் அல்லர். ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர்
பெரும்புலமை பெறுவாரேயானால், அவர் அறிஞர்
எனப்படுகிறார். சார் சி.வி.ராமன் ராமன் விளைவைக்
கண்டறிந்து நோபல் பரிசு பெற்றார். அவரின் ராமன்
விளைவு பற்றி அன்றைய இந்தியாவில் எத்தனை
பேருக்குத் தெரியும்? மற்றவர்களுக்குத் தெரியவில்லை
என்பதால் அவர் அறிஞர் ஆக மாட்டாரா என்ன?
**
நியூட்டன் தன்னுடைய பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா
நூலை லத்தீன் மொழியில்தான் எழுதினார். லத்தீன்
மொழி அன்று எத்தனை பேரால் பேசப்பட்டது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக