வெள்ளி, 17 ஜூன், 2016

வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்?
----------------------------------------------------------------------------------
ஆஷ் துரையைச் சுடுவதற்காக வாஞ்சிநாதன்
பயன்படுத்திய துப்பாக்கி  அவருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? அந்தத் துப்பாக்கியை அவருக்கு வாங்கிக்
கொடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்தத் தகவல்
தனித்தமிழ் மற்றும் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த
பேராசிரியர் இளவரசு அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தின் பெயர்
விடுதலைப்போரில் பாவேந்தரின் பங்கு என்பது.
**
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நூலின் வெளியீட்டு
விழா சென்னையில் நடந்த பொழுது, அதற்கு நான்
சென்றிருந்தேன். கூட்டத்  தலைமை மறைந்த
தனித்தமிழ் இயக்கப் போராளி முனைவர் அரணமுறுவல்.
**
அண்ணன் டி.எஸ்.எஸ் மணி அவர்கள் தந்தி
தொலைக்காட்சியில் மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது,
வாஞ்சிநாதன் பற்றிப் பிரஸ்தாபித்தார். நான் அவருக்கு
இத்தகவலைக் கூறினேன். மேல் விவரங்கள்
வேண்டுமென்றால் அரணை முறுவல் அவர்களைக்
கேட்குமாறு கூறினேன். அதன்படியே மணி அண்ணனும்
அரணமுறுவலிடம் விளக்கம் கேட்டுப் பெற்றார்.
**
அந்த விளக்கத்தை மறுநாளன்று மெய்ப்பொருள்
காண்பது அறிவு நிகழ்ச்சியிலும் தெரிவித்தார்.
தாங்கள் மணி அண்ணனிடம் கேட்டு நான் கூறுவது
பற்றி உறுதிப்  படுத்திக் கொள்ளலாம். (நான், மணி
அண்ணன், அரண முறுவல் ஆகியோர் 1980களில்
ஒரே குறிப்பிட்ட  சூழலில் பணியாற்றினோம்
என்பதும் என் திருமணத்தை அரண முறுவல்
அவர்கள்தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்
என்பதும் தங்களின் தகவலுக்காக,
**
திருநெல்வேலிக்காரனான என்னால் பல தகவல்களை
பெற முடிந்தது என்பதால் உறுதிபடக் கூறுகிறேன்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக