ஞாயிறு, 26 ஜூன், 2016

Undecillion = பதினொன்றகம்
duodecillion = பன்னீரகம் (பன்னிருவகம்)
tredecillion = பதின்மூன்றகம்
quatturdecillion =  பதினான்ககம்
quin =பதினைவகம்
sex = பதினாறகம்
sept = பதினெழுவகம்
octo = பதினெண்மகம்
nov = பதிதொட்டகம்
---------------------------------------------------
குறிப்பு: பதிதொட்டகம் என்ற சொல்லைக் கருதுக.
ஒன்பது = தொட்டு என்ற மூல நிலையில் இருந்து
 உருவாக்கிய சொல் இது.
சுருங்கள் கூறின்,
ஒன்று,  இரண்டு,..............., ஒன்பது, பத்து என்பதை
ஒன்று, இரண்டு,................., தொட்டு, பத்து என்று
எடுத்துக் கொண்டுள்ளேன். இறந்து போன அந்தச்
சொல் (9க்குரிய மூலச் சொல்) தொட்டு என்பது கருத்து.
------------------------------------------------------------------------------------------------
vigintillion = இருபதகம்
unvigintillion = இருபத்தொன்றகம்
duovigintillion = இருபத்திரண்டகம்

இவ்வாறு உருவாக்கிக் கொள்ள இயலும்.     
----------------------------------------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் என்ற செருக்கு
தலைக்கேறி நின்ற காலத்தில் இந்தத் தமிழ்ப்
பேரெண்களை ஆக்கினேன். ஆங்கிலப்பாணி
போன்று அப்படியே இருத்தல் வேண்டும் என்று
முடிவு செய்து, முன்னொட்டு, பின்னொட்டு
ஆகியவற்றைப் பெய்து ஆக்கினேன். அன்று
மிகப்பெரிய செயலாகத் தோன்றியது இது எனக்கு.
இன்று மிக எளிய செயலாகத் தோன்றுகிறது.
**
குறிப்பு: என்னுடைய தொட்டு என்ற சொல்லை
( 9க்குரிய சொல்) தமிழகம் ஏற்காவிட்டால்
நடப்பிலுள்ள ஒன்பது என்ற சொல்லையே
பயன்படுத்துவதில் எனக்குத் தடையில்லை.

மீதி எண்களின்  ஆங்கிலப் பெயர்களை வைத்துக்
கொண்டு, இதே போன்று எவராயினும் தமிழ்ச்
சொற்களை உருவாக்க இயலும். 

இவை ஏற்கவியலாதவை எனில் தள்ளுக.
திருத்தி ஏற்கலாம் எனில் திருத்துக.
அனைத்தும் உங்கள் உரிமை.



எட்டுப்பேர் என்பதை எண்மர் என்கிறோம்.
அதுபோல் ஒன்பது பேர் என்பதை என்னுடைய
கருத்தில் தொட்டு+ பேர்= தொட்டுப்பேர் எனலாம்.
எனவே தொட்டகம் என்று குறிப்பிட்டேன்.
(கவனிக்கவும்: 9 என்ற எண்ணுக்குரிய சொல்லாக
ஒன்பது  என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாவாணரின் பாதிப்பு. எனவே 9 என்ற எண்ணுக்குரிய
சொல்லாக தொட்டு என்ற புதிய சொல்லை
பெய்துள்ளேன். எனவேதான் தொட்டகம்.
**
90 = தொண்ணூறு என்பது தவறு; ஒன்பது என்று
ஆரம்ப காலத்தில் சொன்னது   போல் சொல்ல வேண்டும்/

900 = தொள்ளாயிரம் என்பது தவறு. இது வெறும் நூறுதானே.
இதில் ஆயிரம் எங்கிருந்து வந்தது? எனவே
900= தொண்ணூறு என்று சொல்ல வேண்டும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது இது.  


வேல்முருகன், நான் எழுதி உள்ளவை, ஆக்கித்
தந்தவை எல்லாம் ஒரு வழிகாட்டலுக்குத்தான்.
எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்ளுங்கள். உங்களிடம் ஒப்படைத்து
விட்டேன்.  தேவைக்குத் தக்கபடி
மாற்றிக் கொள்க. அடுத்த தலைமுறை வந்து விட்டது.
இனி எமக்கு நிம்மதி. பயன்படுமானால் பயன்படுத்துக.
இல்லையெனில் வீசி எறிக.  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக