ஞாயிறு, 19 ஜூன், 2016

எமது கட்டுரைத் தொடரில் உள்ள இக்கட்டுரை
மறைமலை அடிகள் என்னும் அறிவுக்கடல் அவர்கள்
சமஸ்கிருதம் பற்றி என்ன கூறினார் என்பதை
விளக்கும் தொடர். இக்கட்டுரையின் கருத்துக்களை
படித்துப் புரிந்து கொள்ள முதிர்ந்த வாசகத்
தன்மையும் ஓரளவு சமஸ்கிருத அறிவும் தேவைப்
படுகிறது. சுருங்கக் கூறின், இது இரும்பு அடிக்கும்
இடம். இங்கு ஈக்களுக்கு வேலை இல்லை.


நவீன அறிவியலின் வளர்ச்சியானது ஒரு மொழியின்
ஆதிக்கம் என்பதை பெருமளவு தகர்த்து விடுகிறது.
விக்கிப்பீடியாவில் மட்டும் 288 மொழிகளில் கட்டுரைத்
திரட்டு உள்ளது. எனவே முன்பு போல, ஒரு மொழியானது
வேறொரு மொழியை ஆதிக்கம் செய்வது என்பது
இன்று சாத்தியமற்றது.
**
என்றாலும் தமிழ்நாட்டில் காலத்துக்குப் பொருந்தாத,
புதுப்பிக்கப் படாத மொழிக்கொள்கையானது
பிரதான அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்கப்
படுகிறது. இதை மாற்றுவதற்கான ஒரு எளிய
முயற்சிதான் இத்தொடர்.
**
உண்மை உணர்ந்த தங்களை போன்றோர், தமிழ்நாட்டின்
மொழிக்கொள்கையின் போலித்தனத்தை அமபலப்
படுத்தி முறியடிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.


இது ஒரு தனிக் கட்டுரை அல்ல. தொடரின் ஒரு பகுதி
மட்டுமே. அருள் கூர்ந்து ஏற்கனவே வெளியிட்ட
கட்டுரைகளையும் படிக்குமாறு வேண்டுகிறோம். அப்போதுதான்
முழுத்தொடரிலும் சொல்லப்படும் மையாக கருத்தைப்
புரிந்து கொள்ள இயலும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக