பேரறிவாளன் எந்தெந்த சட்டப் பிரிவுகளில்
தண்டிக்கப் பட்டார்?
எந்தெந்தப் பிரிவுகளில் விடுவிக்கப் பட்டார்?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
-------------------------------------------------------------------------------
உச்சநீதிமன்ற நீதியரசர் மேதகு D P வாத்வா ஜே
அவர்கள் மே 11, 1999 அன்று அளித்த தீர்ப்பு
இக்கட்டுரைக்கு ஆதாரம் ஆகும். சட்ட நுணுக்கம்
நிறைந்த ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்பில்,
பேரறிவாளன் பற்றிய பகுதி மட்டுமே இங்கு
எளிமைப் படுத்தித் தரப் படுகிறது.
பேரறிவாளன் 18ஆவது அக்யூஸ்டு (A-18) ஆவார்.
முதல் அக்யூஸ்டு (A-1) நளினி என்பது வாசகர்கள்
அறிந்ததே. மேல்முறையீட்டில் பேரறிவாளன்
18ஆவது APPELLANT ஆவார்.
1) பேரறிவாளன் (A 18) இரும்பொறையுடன் (A 19) சேர்ந்து
ஜூன் 1990இல், அதாவது ராஜீவ் படுகொலைக்கு ஓராண்டு
முன்பு, யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற
இடங்களுக்குச் சென்றார்.
2) சென்னையில் 04.05.1991 அன்று, அதாவது ராஜீவ்
கொலைக்கு 17 நாட்கள் முன்பு, கவசாகி மோட்டார்
சைக்கிளை வாங்கினார். இது அவரும் மற்ற
சதிகாரர்களும் செல்ல வேண்டிய இடங்களுக்கு
விரைவாகச் செல்ல உதவியாக வாங்கப் பட்டது.
3) சாத்தானின் படை என்ற நூலை அச்சிட்டு,
அச்சகத்துக்கு உரிய பணத்தைக் கொடுத்து
வெளியே கொண்டுவந்தார். இலங்கை சென்ற
IPKF படை பற்றிய நூல் அது.
4) இந்த நூலின் ஒரு பிரதியை சிவராசன் (DA- Deceased Accused) மூலமாக பிரபாகரனுக்கு அனுப்பி வைத்தார்.
இன்னொரு பிரதியை முருகன் (A -3) மூலமாக
அனுப்பி வைத்தார்.
5) நீதியரசர் மேதகு வாத்வா அவர்களின் தீர்ப்பு வாசகம்:
-----------------------------------------------------------------------------------------------------
(VII) (a) Arivu (A-18) visited Jaffna and other places in Sri Lanka along
with Irumborai (A-19) clandestinely in June 1990, purchased a Kawasaki
Motor cycle on 4.5.1991 at Madras to facilitate quick movement of himself
and one or the other of the co-conspirators, (a-1) arranged payment for
printing the compilation described as "The Satanic Force" and sent one
copy of the same to Prabhakaran (absconding) through Sivarasan (DA)
and another set through Murugan (A-3).
6) நீதிமன்ற விசாரணையின்போது, பேரறிவாளன்
யாழ்ப்பாணம் சென்றது இரும்பொறையின் சாட்சியம்
மூலமாக உறுதிப் படுத்தப் பட்டது. அங்கு பிரபாகரன்,
பொட்டு அம்மான் ஆகிய புலித் தலைவர்களைச்
சந்தித்ததும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்
கொண்டதும் சான்றாதாரங்களாக நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப் பட்டிருந்தது.
7) -----கட்டுரை தொடரும்----------
ஆங்கிலத்தில் இருக்கும் ஒன்றிரண்டு வாக்கியங்களுக்கு
தமிழில் நிறையப் பத்திகளை எழுத வேண்டியுள்ளது.
எனவே கட்டுரை தொடரும், வாசகர்கள் விரும்பினால்.
******************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக