சனி, 25 ஜூன், 2016

வட்டமும் சதுரமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
சதுரக்  கணக்கைச் செய்யுங்கள்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
சதுரத்தின் பக்கம் 1 அலகு  என்று கொண்டு  ஒரு
சதுரம் செய்யப் படுகிறது. இச்சதுரத்தின் பக்கங்களின்
மையப்புள்ளிகளை இணைத்து ஒரு சதுரம் செய்யப்
படுகிறது. இதே முறையில் தொடர்ந்து சதுரங்கள்
முடிவேயற்று செய்யப் படுகின்றன. இந்த எல்லாச்
சதுரங்களின் பரப்பளவின்  மொத்தம் என்ன?

A square with its side 1 unit is made.By joining the midpoints of
the sides of this square, another square is made. This process of
making new squares is repeated endlessly. Find the sum of the
areas of all these squares.

கணிதத்தின் எழிலையும் ஆழத்தையும் ஒருசேர
வெளிப்படுத்துகிறது இந்தக் கணக்கு. 11ஆம் வகுப்பு
CBSE பாடப்புத்தகத்தில் இருந்து இது எடுக்கப் பட்டது.

11,12 வகுப்பு மாணவர்கள் மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் (முன்னாள் மாணவர்கள் உட்பட)
இந்தக் கணக்கைச் செய்யலாம்.
12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கணக்கைச் செய்யத் தெரியாமல் விழித்தால், உதைக்கப் படுவது திண்ணம்.

12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் கீழ்
நடத்தப்படும் எல்லாத் தேர்வுகளிலும் கால்குலேட்டர்
பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே நியூட்டன் அறிவியல் மன்றமும் கால்குலேட்டர்
பயன்பாட்டைத் தடை செய்துள்ளது.

விடைகள் வந்து குவியட்டும்.
******************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக