புதன், 22 ஜூன், 2016

ஜனனிக்காக வர்ஷினி விட்டுக் கொடுத்தாரா?
இதில் பிற்பட்டோருக்கான இடம் பறிபோனதா?
ஓர் உண்மைநிலை விளக்கம்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில்  மாணவர்
சேர்க்கைக்கான கவுன்சலிங் சென்னையில் நடந்து
வருகிறது. இதில் முதல் நாளன்று (20.06.2016) சிறப்புப்
பிரிவினருக்கான கவுன்சலிங் நடைபெற்றது.
இதில் BC மாணவி வர்ஷினி என்பவர் தம்முடன்
பயின்ற OC மாணவி ஜனனி என்பவருக்காக
தம்முடைய MBBS சீட்டை விட்டுக் கொடுத்தார்.

இப்படி ஒரு செய்தியை இந்து ஆங்கில ஏடு
(21.06.2016, பக்கம்-7, சென்னைப் பதிப்பு))
"Girl gives up medical seat for classmate" என்ற தலைப்பில்
பெரிதாக வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து
தமிழ் இந்து ஏடு மற்றும் இணைய இதழ்களில்
இச்செய்தி மிகுந்த வீச்சுடன் வெளியானது.

இது போதாதா? செய்தியைப் படித்த மறு நிமிடம்
சமூகநீதிப் போராளிகளாக அவதாரம் எடுத்த
குட்டி முதலாளித்துவ அரைவேக்காடுகள்
அனைவரும் வாளை உருவிக்கொண்டு முச்சந்திக்கு
வந்து விட்டனர். பிற்பட்ட வகுப்பு மாணவி வர்ஷினி
முற்பட்ட வகுப்பு மாணவி ஜனனிக்கு விட்டுக்
கொடுத்ததால் BC வகுப்பினருக்கு உரிய ஓர் இடம்
பறிபோய் விட்டது என்று சாராயக் கடைகளுக்கு
முன்னால் வாந்தி எடுத்தனர்.

இது உண்மையா? BC க்குரிய ஒரு இடம் பறிபோய்
விட்டதா? அந்த இடத்தை OC பிரிவினர் அபகரித்துக்
கொண்டனரா? ஒரு மயிரும் இல்லை என்பதே
உண்மை!

BC க்குரிய எந்த இடமும் பறிபோகவில்லை.
BC இடத்தை OC அபகரித்துக் கொள்ளவில்லை.
அப்படி யாரும் யாருடைய இடத்தையும்
அபகரித்துக் கொள்ள முடியாது.

ஆயின் நடந்தது என்ன? There is no "GIVING UP" at all.
What happened was just a mutual arrangement between two top ranking
students to gain entry into MMC. The said arrangement was lawful, not so
uncommon, a permitted one and made without jeopardizing the interest
of any other especially in the reserved category. Ms Varshini just has
exercised her LEGITIMATE right; that is all.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிந்து
கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை எப்படி
நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். அதை இங்கு விளக்கி மாளாது.

சம்பந்தப்பட்ட இரு மாணவிகளும் அதிக
மதிப்பெண்களும் கூடுதலான  RANKஉம் பெற்றவர்கள்.
அ) வர்ஷினி, BC, 199.00, General Rank: 140
ஆ) ஜனனி , OC, 198.75, General Rank: 208

இருவரும் சிறப்புப் பிரிவு (Special Category) மற்றும்
பொதுப்பிரிவு (Common Category) ஆகிய இரண்டிலும்
விண்ணப்பித்து இருந்தனர். சிறப்புப் பிரிவில்
முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில்
விண்ணப்பித்து இருந்தனர். இந்தப் பிரிவில் மொத்த
விண்ணப்பதாரர்கள் 415 பேர். இந்த 415 பேரில்
இவர்கள் இருவரும் முதல் மற்றும் இரண்டாம்
RANK பெற்று இருந்தனர். எனவே இவர்கள்
இருவருக்கும் இடம் கிடைக்காது என்ற பேச்சுக்கே
இடமில்லை.

சிறப்புப் பிரிவில் பின்வரும் மூன்று வகையினர்
மட்டுமே விண்ணப்பிக்கலாம். 1) உடல் ஊனமுற்றோர்
2) முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 3) சிறந்த
விளையாட்டு வீரர்கள்.

கலைஞர் காலத்தில் கலப்புத் திருமணத் தம்பதியரின்
குழந்தைகள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள்
என்ற பிரிவுகளில் ஒதுக்கீடு இருந்தது. ஜெயலலிதா
ஆட்சிக்கு வந்ததும் இவற்றையெல்லாம் ரத்து செய்து
விட்டார். தற்போது சிறப்பு ஒதுக்கீட்டில் மூன்று
வகையினர் மட்டுமே.

வர்ஷினி, ஜனனி ஆகிய இருவருக்குமே சிறப்புப்
பிரிவினருக்கான கலந்தாய்வு, பொதுப்பிரிவின
ருக்கான கலந்தாய்வு ஆகிய இரண்டுக்கும்
அழைப்புக் கடிதம் (call letter) வந்துள்ளது. (தனியாக
call letter எந்த விண்ணப்பதாரருக்கும் அனுப்பப்
படுவதில்லை; இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்து பெற்றுக் கொள்வதுதான்).

எனவே இருவரும் 20.06.2016 அன்றும், 21.06.2016 அன்றும்
கவுன்சலிங் செல்ல வேண்டும். இதில் சிறப்புப் பிரிவு
கலந்தாய்வில் வர்ஷினி பங்கு பெறவில்லை.
பங்கு பெற்ற ஜனனி MMCயில் இடம் பெற்றார்.

வர்ஷினி 21.06.2016 நடந்த கலந்தாய்வில் பங்கேற்று,
திறந்த போட்டிப் பிரிவில் (OPEN COMPETITION)
MMCயில் இடம் பெற்றார். BC வகுப்பைச் சேர்ந்த
வர்ஷினி, பிற்பட்டோருக்கான பிரிவில் (30 சதம்)
இடம் பெறவில்லை. திறந்த போட்டிக்குரிய
31 சதம் இடங்களில் ஒன்றைப் பெற்றார்.

ஆக, இதுதான் நடந்தது. இதில் விரை வீக்கம், மூலம்,
பௌத்திரம் ஏற்பட எங்கு இடம் உள்ளது?
தற்குறிகளின் சொர்க்கம் தமிழ்நாடுதான்
*******************************************************************     


      




  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக