நிர்மலாவும் உஷாவும் மு.மேத்தாவும்!
கலைஞரை வன்மையாகக் கண்டிப்போம்!
----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
நிர்மலா! அழகான தமிழ்ப் பெண்களுக்கு வைக்கப்
படும் சமஸ்கிருதப் பெயர். நிர்மலா மட்டுமா?
உஷா, ஐஸ்வர்யா, ஸ்வப்னா, புஷ்பலதா, வெறும் லதா
ஆகிய இவையெல்லாம் எவ்வளவு அழகிய
சமஸ்கிருதப் பெயர்கள்! தமிழ்ப்பற்று அளவுக்கு
அதிகமாக உள்ளவர்கள் அல்லவா தங்களின்
பெண்களுக்கு இவ்வாறு பெயர் வைக்கிறார்கள்!
நிர்மலா என்றால் என்ன பொருள்? பெயர் வைத்த
தமிழர்களுக்குத் தெரியுமா? நிர்+ மலம்= நிர்மலம்.
மலம் என்றால் அழுக்கு, கசடு, கழிவு என்று பொருள்.
நிர் என்பது சமஸ்கிருதத்தில் ஒரு முன்னொட்டு.
எதிர்மறைப் பொருளைத் தருவது. அதாவது நிர்
என்றால் இல்லை என்று பொருள்.
ஆக, நிர்மலா என்றால் அழுக்கற்றவள் என்று பொருள்.
அதாவது தூயவள் என்று பொருள். 1970களில்
கவிஞர் மு.மேத்தா ஒரு புதுக்கவிதை எழுதி
இருப்பார்.
"இருமலா என்றான் நண்பன்
என் காதில் நிர்மலா என்று விழுந்தது".
---- இந்த ரேஞ்சில் கவிதை போகும். மனைவி ஊருக்குப்
போய்விட்ட நிலையில், நிர்மலா என்ற மனைவியைப்
பிரிந்த கணவனுக்கு, எந்த வார்த்தையைக் கேட்டாலும்
மனைவியின் பெயராகவே தோன்றுகிறது.
இதுதான் மு.மேத்தாவின் கவிதை!
மும்மலம் அறுத்த முனிவர்கள் என்று படித்துள்ளோம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவையே அந்த
மூன்று மலங்கள். எந்த மலமும் அறுக்காமலே
இன்று எவர் வேண்டுமானாலும் முனிவர் ஆகலாம்.
உஷா என்ற சமஸ்கிருதச் சொல் வைகறைப்
பொழுதைக் குறிக்கும். "விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக" என்கிறாரே கண்ணதாசன்.
அந்தப் பொழுதுதான் உஷை (உஷா).
புஷ்பலதா என்பதும் அழகிய சமஸ்கிருதப் பெயரே.
புஷ்பம்+லதா= பூங்கொடி என்று பொருள். லதா
என்றால் கொடி.
ஐஸ்வர்யா என்றால் செல்வி என்று பொருள்.
ஐஸ்வர்யம் = செல்வம். கலைஞர் ஏன் தம்
மகளுக்கு செல்வி என்று பெயர் வைத்தார்?
ஐஸ்வர்யா என்று வைத்திருக்கலாமே!
குமரி அனந்தன் ஏன் தம் மகளுக்கு தமிழிசை
என்று பெயர் வைத்தார்? ஸங்கீதா என்று பெயர்
வைத்திருக்கலாமே! ஒரு காங்கிரஸ்காரருக்கு
ஏன் தமிழ்ப்பற்று?
அழகழகான சமஸ்கிருதப் பெயர்கள் இருக்க
ஏன் தமிழ்ப் பெயர்கள்? கலைஞர் கண்டிக்கத்
தக்கவர். வாருங்கள் கண்டிப்போம்!
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக