சனி, 25 ஜூன், 2016

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.க்கு
தத்துவத் தளத்தில் செல்வாக்கு இல்லை. வாஜ்பாய்
ஆட்சியின்போது கூட, ஆர்.எஸ்.எஸ் தத்துவத்
தளத்தில் செல்வாக்குடன் இல்லை. இன்று தமிழகம்,
கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை
இல்லாத செல்வாக்கு ஆர்.எஸ்.எஸ்.க்கு வந்துள்ளது.
(தேர்தல் தளத்தைப் பற்றி இங்கு பேசவில்லை)
எனவே ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் சித்தாந்த
ரீதியான விஷயங்களில், ஆர்.எஸ்.எஸ்.க்கு
பதில் கொடுக்க, திராவிட முகாம்களில் ஆளில்லை.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இதைச்
செய்து வருகிறது. 

உலகில் மார்க்சியம்  பரவி இருந்த நாடுகளில் எல்லாம்
மதமற்றவர்களும் கடவுளை ஏற்காதவர்களும்
மொத்த மக்கள் தொகையில் 80 சதம் உள்ளார்கள்.
இதற்கு ஆயிரம் நிரூபணங்கள் உள்ளன.

நீங்கள் கூறும் திராவிட நாத்திகம் வந்த வேகத்திலேயே
திரும்பிப் போய் விட்டதே. அதைத்தானே கூறுகிறார்
வைரமுத்து. இது ஒரு நீர்க்குமிழித்தன்மை உடைய
நாத்திகம். காத்திரமான நாத்திகம் அல்ல.

வைரமுத்துவும் நானும் கலைஞர் அபிமானிகள். திராவிட இயக்கத்தோடு நீண்ட காலத் தொடர்பு உடையவர்கள்.
வைரமுத்துவும் அறிவியல் கற்றவர்தான். முதலில்
அவர் B.Sc Zooதான் படித்தார். பின்னர்தான் எம்.ஏ தமிழ்
படித்தார். வைரமுத்து வேற்று ஆள் அல்ல. ராமகோபாலன்
சொன்னால் சந்தேகப் படலாம். ஆதாரம் கேட்கலாம்.
வைரமுத்து சொன்னதை நம்பால் இருக்கலாமா?  

சீன நாட்டின் அரசமைப்புச் சட்டம் சீனா ஒரு
நாத்திக தேசம் என்று வரையறுக்கிறது. உலகிலேயே 
அதிகமான நாத்திகர்கள் உள்ள நாடு சீனா.

தமிழ்நாட்டில் CPI, CPM கட்சிகள் மீது கடும் விமர்சனம்
இருந்தபோதிலும், கட்சி உறுப்பினர்களில்
முக்கால்வாசிப்பேர் நாத்திகர்களாக உள்ள
கட்சிகள்தான் CPI,CPM.

ஒரு தோப்பில் ஆயிரம் தென்னை மரங்களுடன்
ஒன்றிரண்டு மாமரங்களும் இருக்கலாம்.
அதற்காக அதை மாந்தோப்பு என்று அழைக்க முடியாது.
தென்னத்தோப்பு என்றுதான் அழைக்க முடியும்.
அதுபோலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தவர், மலை
மலையாக எழுதிக் குவித்தவர் பெரியார். அதில்
ஒன்றிரண்டு கருத்துக்களை எடுத்து வெளியே
போட்டு அதை சான்றாகக் காட்ட முயல்வதில்லை
பொருளில்லை.
**
நாங்கள் பெரியார் வாழ்ந்த
காலத்தில் கூடவே வாழ்ந்தவர்கள். பெரியார் பேசிய
பேச்சை நேரடியாகக் காதால் கேட்டவர்கள். பெரியார்
எப்படி இருந்தார், என்னவெல்லாம் சொன்னார்
என்பதற்கு நாங்கள்தான் சாட்ச்சியங்கள். எனவே
பெரியாரின் சாரத்தைக் கிரகித்துக் கொண்டு
பேச வேண்டும்.

பெரியாரின் கருத்து என்ன என்பதற்கு அவர் காலத்தில்
கூடவே வாழ்ந்த நாங்கள்தான் ஆதாரம். எங்களை மிஞ்சிய
ஆதாரம் என்ன உள்ளது? ஒவ்வொரு விஷயத்திலும் பெரியார் என்ன சொன்னார், அவரின் கருத்து என்ன என்பதை
நாங்கள் அறிவோம். பெரியார் ஏதோ கி.மு. காலத்துத்
தலைவரா என்ன?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக