வியாழன், 23 ஜூன், 2016

கம்பி, வட்டம், சதுரம்!
கணக்கிற்கு விடை காண வாரீர் செகத்தீரே!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
1) எம்மிடம் ஒரு கம்பி இருக்கிறது. அக்கம்பியின் நீளம்
28 மீட்டர்.
2) இந்தக் கம்பியை இரண்டு துண்டாக்க வேண்டும்.
3) இரண்டு துண்டுகளில் ஒரு துண்டை சதுரமாகவும்
இன்னொரு துண்டை வட்டமாகவும் ஆக்க வேண்டும்.
4) அவ்வாறு ஆக்கப் பட்ட வட்டம் சதுரம் ஆகிய
 இரண்டின் மொத்தப் பரப்பு மிகவும் குறைந்த
அளவினதாக இருக்க வேண்டும்.
5) அப்படியானால், வெட்டப்பட்ட கம்பியின்
இரு துண்டுகளும் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?

ஆங்கில மூலம்:
----------------------------
A wire of length of 28 m is to be cut into two pieces. One of the pieces
is to be made into a square and the other into a circle. What should be the
length of the two pieces so that the combined area of the square and the
circle is MINIMUM?

இது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. பாடப் புத்தகக்
கணக்கு தான்! (A text book sum). உலகம் முழுவதும்
ஒவ்வொரு ஆண்டிலும் இந்தக் கணக்கைச் செய்யக்
கற்றுக் கொள்ளும் மாணவர்கள் கோடானு கோடிப்பேர்.
தமிழ்நாட்டில் ஜூன் ஜூலை மாதங்களில் லட்சக்
கணக்கான மாணவர்கள் இந்தக் கணக்கைப்
புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள்
பேறு பெற்றவர்கள்.

1) ஒரு நீர்த்துளியைக் கையில் எடுத்துப் பாருங்கள்.
அது ஏன் கோள  வடிவில் இருக்கிறது?
2) தேனீக்கள் ஏன் அறுகோண வடிவில் தேன்கூட்டைக்
காட்டுகின்றன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கணக்கு விடை
தருகிறது. மிக எளிய கணக்கு. ஒட்டு மொத்த
உலகையும் மகிழ்ச்சியால் நிறைக்கும் கணக்கு.

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு.
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக