செவ்வாய், 21 ஜூன், 2016

உடற்பயிற்சியும் யோகாவும்!
போலிப்பகுத்தறிவு மூடர்களின்
அறிவியலுக்கு எதிரான பார்வை!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
பள்ளிகளில் டிரில் மாஸ்டர் என்று ஓர் ஆசிரியர் உண்டு.
உடற்பயிற்சி ஆசிரியர் (Physical Education Teacher) என்று
இவர் அழைக்கப் படுவார். உடற்கல்விப் படிப்பு
B.P.Ed (Bachelor of Physical Education) என்ற பெயரில் பட்டப்
படிப்பாகவும் சான்றிதழ் படிப்பாகவும் இது
கல்லூரிகளில் சொல்லித் தரப் படுகிறது.

அட்டென்சன், ஸ்டாண்டட்டீஸ், ரைட் டர்ன், லெப்ட்
டர்ன், அபௌட் டர்ன் என்பதெல்லாம் நாம் எப்படித்
தெரிந்து கொண்டோம். டிரில் மாஸ்டர் (அல்லது
பி.டி மாஸ்ட்டர்) சொல்லித் தந்துதான் நாம் தெரிந்து
கொண்டோம்.

உடற்பயிற்சி என்பது வெளித்தெரியும் உடலின்
உறுப்புகளுக்கான பயிற்சி. அதாவது கை, கால்,
தொடை, கழுத்து என்று வெளித்தெரியும்
உறுப்புகளுக்கான பயிற்சி. லாங் ஜம்ப், ஹை ஜம்ப்
போன்ற பல விளையாட்டுகள் இவ்வாறு வெளித்
தெரியும் உறுப்புகளுக்குப் பயிற்சி அளிப்பவை.

இதுபோலவே, வெளித்தெரியாத   உடலின்
உறுப்புகளுக்கும் பயிற்சி தேவை. நுரையீரல்,
கல்லீரல், குடல், இரைப்பை, கருப்பை ஆகியவை
வெளித்தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும்
உறுப்புகள். இவற்றுக்கும் பயிற்சி தேவை.
இந்தப் பயிற்சியைத் தருவதுதான் யோகா (yoga).

டிரில் மாஸ்டர் தரும் பயிற்சிகள் மேற்கூறிய
உள்ளுறுப்புகளுக்கு உரியவை அல்ல.
உள்ளுறுப்புகளுக்குப் பயிற்சி தர ஒரு
யோகா மாஸ்டர் தேவை.

உடற்பயிற்சி, யோகா இரண்டுமே உடலைப்
பேணுபவை. உடலை நன்கு பராமரிப்பவை.
உடலை நலத்துடன் வைத்திருக்க உதவுபவை.
அவ்வளவுதான்.

உடம்பு என்பது உயிருக்கான மூலதனம்.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்"
என்றார் திருமூலர். உடலோம்பலில் கருத்துடையோர்
உடற்பயிற்சி, யோகா இவ்விரண்டையும்
கைக்கொள்ளுவது சாலச் சிறந்தது. இதுதான்
யோகா பற்றிய அறிவியல் பார்வை.

மற்றப்படி, யோகா செய்தால் மாரடைப்பு வராது
என்பதோ, யோகா ஒரு சர்வரோக நிவாரணி
என்பதோ மிகையான  உயர்வு நவிற்சி ஆகும்.

அதைப்போல, யோகா செய்தால் பசி அடங்குமா,
யோகா செய்தால் தொழில் வளர்ச்சி ஏற்படுமா
என்ற கேள்விகளும் மூடத்தனமான  குதர்க்கம்.

தமிழ்நாட்டின் போலிப்பயல்கள்!
-------------------------------------------------------------
போலிகளும் ஆஷாடபூதிகளும் (hypocrites) மிகுந்த
தமிழ்நாட்டில் அறிவியல் பார்வைக்கு இடமில்லை.
சமூகத்தின் மொத்தச் சூழலையும் நச்சுப்
படுத்தும் போலிப் பகுத்தறிவுவாதிகள் எந்த
ஒன்றையும் அறிவியல்  வழியில் பார்ப்பதே
இல்லை. அவர்களால் என்றுமே பார்க்க இயலாது.

கணிகைக்குப் பிறந்த இந்தப் போலிகளால்
யோகா குறித்த அறிவியல் அணுகுமுறை
மக்களைச்  சென்றடையாமல் தடுக்கப்
படுகிறது. யோகா என்பது பொருள்முதல்வாதத்தின்
படைப்பு. (A product of materialism). பொருள்முதல்வாதம்
என்றால் என்னவென்றே தெரியாத கயவர்கள்
தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்
கொள்ளும் அவலம் தமிழ்நாடு தவிர இப்பூவுலகில்
வேறு எங்கும் இல்லை.
********************************************************************        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக