செவ்வாய், 14 ஜூன், 2016

பெட்டிக்கடையில் பாட்டரி வாங்க முடியுமா?
திலீப் சோர்டியா கடையில் பேரறிவாளன்
வாங்கிய 12 வோல்ட் பாட்டரிகள்!
கடிகாரத்துக்கான பாட்டரி வேறு! ஸ்கூட்டர் பாட்டரி வேறு!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
1) திலீப் சோர்டியா என்பவர்  கார் டயர்கள் மற்றும்
பாட்டரிகளை  விற்கும் ஹோல்சேல் டீலர்.
இவர் சென்னையில் பெரிய கடை வைத்திருக்கிறார்.
இவரின்  கடையில்தான் 12 வோல்ட் பாட்டரியை
(கோல்டன் பவர் நிறுவனத் தயாரிப்பு) பேரறிவாளன்
வாங்கினார். சிவராசன் பயன்படுத்திய வயர்லஸ்
கருவிக்கு இந்த பாட்டரிதான் பயன்பட்டது. இதன்
மூலம்தான் சிவராசன் ஈழத்தில் உள்ள பிரபாகரன்,
பொட்டு அம்மானுடன் தொடர்பு கொண்டார்.

2) இந்த 12 வோல்ட் பாட்டரியைக் கொண்ட வயர்லஸ்
கருவியானது விஜயன் (A-12) குடியிருந்த வீட்டின்
சமையல் அறையில் குழிதோண்டிப் புதைக்கப் பட்டு
இருந்தது. சி.பி.ஐ அதிகாரிகள் அந்தக் குழியைத்
தோண்டி வயர்லஸ் கருவியைக் கைப்பற்றினர்.

3) இந்த 12 வோல்ட் பாட்டரியானது அரசுத்தரப்பு
சான்றாதாரப் பொருள் எண் 209 (MO 209) ஆக
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

4) மேலும் ராயப்பேட்டை ஹைரோட்டில் உள்ள
ஒரு  கடையில், இரண்டு 9 வோல்ட் பாட்டரிகளை
(கோல்டன் பவர் நிறுவனத் தயாரிப்பு)
பேரறிவாளன் ரூ 46க்கு வாங்கினார். இக்கடையின்
சேல்ஸ்மேன் திரு N முஹைதீன் இந்த பாட்டரிகளை
பேரறிவாளனுக்கு விற்றார். இவர் அரசுத் தரப்பு
சாட்சியாக (PW-91) சாட்சியம் அளித்தார்.

5) பெட்டிக் கடையில் பாட்டரி வாங்க முடியுமா?
-------------------------------------------------------------------------------------
பாட்டரி என்றவுடனே மக்களின் பொதுப்புத்தியில்
உறைந்திருப்பது, கடிகாரத்தில்டிவி ரிமோட்டில்
பயன்படும் 1.5 வோல்ட் பாட்டரிதான். இது சிலிண்டர்
வடிவில், விரல் பருமனில் இருக்கும்.
இது பெட்டிக் கடைகளில் கிடைக்கும்.

6) ஆனால், 12 வோல்ட் பாட்டரியோ, 9 வோல்ட்
பாட்டரியோ  பெட்டிக் கடைகளில் கிடைக்காது.
இவற்றை இதற்கென்று உரிய கடைகளில்தான்
வாங்க முடியும். இந்தக் கடைகளில் பாட்டரி
வாங்கிய பின், கியாரன்டியும் பில்லும்
வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

7) ஸ்கூட்டர், கார் பாட்டரிகள் வாங்கிய அனுபவம்
உள்ளவர்களுக்கு இது தெரியும்.

8) மேலும் பேரறிவாளன் வாங்கியவை கோல்டன் பவர்
பாட்டரிகள். எவரெடி பாட்டரி எல்லாக் கடைகளிலும்
கிடைக்கும். ஆனால் விலை உயர்ந்த கோல்டன் பவர்
பாட்டரிகள் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும்.
Physics அல்லது Electronics படித்தவர்கள் இந்த பாட்டரிகள்
பற்றிய அறிவு பெற்று இருப்பார்கள். தமிழ்நாட்டில்
Physics அறிவுக்கு எங்கே போவது?

9) விரல் தடிமனுள்ள 1.5 வோல்ட் பாட்டரி வேறு;
பெல்ட் குண்டுக்கும் வயர்லஸ் கருவிக்கும் பயன்படும்
9 வோல்ட் மற்றும் 12 வோல்ட் பாட்டரிகள் வேறு.
இந்த உண்மை அறிந்தவர்களால் இக்கட்டுரையை
எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

நீதியரசர் வாத்வா அவர்கள் வழங்கிய தீர்ப்பின் வாசகம்:
(உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இருந்து)
-------------------------------------------------------------------------------------------------------
Delip Chordia (PW-88) is a dealer of tyres and batteries. The name of his 
firm is International Tyres Service from whose shop Arivu (A-18) 
purchased the battery. He identified the battery (MO-209) sold to 
one Rajan on 3.5.1991. Battery (MO-209) was seized by M. Narayanan 
(PW-281), D.S.P. from the pit dug in the kitchen of the house occupied 
by Vijayan (A-12). 
***
N. Moideen (PW-91) was working as a salesman in a shop in 
Royapettah High Road. He said that in the second week of May, 1991 
he sold two golden power batteries for Rs.46. He was asked if he could 
identify the man whom police officers had brought to the shop as the 
person to whom he sold the batteries. He identified Arivu (A-18).
*****************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக