மரண தண்டனை போக
பேரறிவாளன் இரண்டு ஆயுள் தண்டனை பெற்றாரா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
---------------------------------------------------------------------------------------------
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதோ
அந்தப் பத்திரிகையில் வந்தது, இந்தப் பத்திரிகையில்
வந்தது என்பதோ ஏற்க இயலாதது. இந்தக் கட்டுரை
நீதியரசர் வாத்வா வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை
ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டு உள்ளது.
பேரறிவாளனுக்கு (A -18) விதிக்கப்பட்ட தண்டனைகள்:
------------------------------------------------------------------------------------------------
1) இ.பி.கோ பிரிவு 302 (கொலைக்குற்றம்) ---- மரண தண்டனை
2) தடா சட்டம் 3(3)--பயங்கரவாதச் செயல்-- ஆயுள் தண்டனை
3)இபிகோ 326-- மூன்றாண்டு கடுங்காவல்
4)இபிகோ 324 -- ஓராண்டு கடுங்காவல்
5) வயர்லெஸ் தந்திச் சட்டம் பிரிவு 6(1)A -- 2 ஆண்டு கடுங்காவல்
6) பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 12--- மூன்று மாதக் கடுங்காவல்
7) தடா சட்டம் பிரிவு 4(3)--- ஆயுள் தண்டனை
ஆக மொத்தத்தில் பேரறிவாளனுக்கு (A-18) ஒரு மரண
தண்டனை, இரண்டு ஆயுள் தண்டனைகள்,
மூன்று மாதக் கடுங்காவல் முதல் மூன்று ஆண்டுக்
கடுங்காவல் வரை பல்வேறு சட்டப் பிரிவுகளில்
வழங்கப் பட்டன.
இதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது,
பேரறிவாளனின் வழக்கறிஞர் திரு நடராசன் தடா
சட்டப் பிரிவில் பயங்கரவாதச் செயல் என்று விதிக்கப்
பட்டிருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்தார்.
தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்
(Punishments will run concurrently) என்ற தீர்ப்பின்படி,
பேரறிவாளன் தமக்கு விதிக்கப்பட்ட மூன்று
மாதக் கடுங்காவல் முதல் மூன்றாண்டுக் கடுங்காவல்
வரையிலான தண்டனைகளை அனுபவித்து முடித்து
விட்டார். எஞ்சியிருக்கும் ஒரே தண்டனையான
ஆயுள் தண்டனையை தற்போது சிறையில்
கழித்து வருகிறார்.
நீதியரசர் வாத்வா அவர்களின் தீர்ப்பு வாசகம்:
--------------------------------------------------------------------------------------
227 12 of Passport Act Guilty 3 months RI
228 4(3) TADA punishable Guilty Life u/s 4(1) TADA and 109 IPC r/w 34 IPC
குறிப்பு: இங்கு 166 முதல் 228 வரையிலானவை
குற்றங்களின் வரிசை எண்கள் (crime serial numbers).
அடுத்து சட்டப் பிரிவுகளும் தண்டனை விவரங்களும்
உள்ளன. சில பிரிவுகளில் விடுதலை செய்யப்
பட்டுள்ளார் (acquitted).
-------------- கட்டுரை தொடரும்-------------------
**************************************************************************

Arivu (A-18) Charge Offence U/S Finding Sentence No.
--------------------------------------------------------------------
166 3(3) TADA Guilty Life;
167 to 182: 109 & 302 IPC Guilty Death (16 Counts)
183 to 199 109 and 326 IPC Guilty 3 years RI (13 counts)
183,184, 86,187, 191 to 198.
200 to 205,226 to 228 Acquitted of charges
185, 188,190 & 199 (4 counts)
200 to 225 109 and 324 IPC Guilty (6 counts) 1 Year RI.
200 to 205 acquitted on counts (206 to 225)
226 6(1-A) of Wireless and Telegraphy Act - Guilty 2 Years RI 109 IPC 227 12 of Passport Act Guilty 3 months RI
228 4(3) TADA punishable Guilty Life u/s 4(1) TADA and 109 IPC r/w 34 IPC
குறிப்பு: இங்கு 166 முதல் 228 வரையிலானவை
குற்றங்களின் வரிசை எண்கள் (crime serial numbers).
அடுத்து சட்டப் பிரிவுகளும் தண்டனை விவரங்களும்
உள்ளன. சில பிரிவுகளில் விடுதலை செய்யப்
பட்டுள்ளார் (acquitted).
-------------- கட்டுரை தொடரும்-------------------
**************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக