புதன், 15 ஜூன், 2016

ராஜீவ் கொலை நடந்த பின்னால், 21 நாள் கழித்து
ஜூன் 11, 1991 அன்று பேரறிவாளன் பிடிபடுகிறார்.
தடா நீதிமன்றம் 1997 ஜனவரியில் பேரறிவாளன் உட்பட
குற்றவாளிகள் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்கியது.
**
அவரின் சிறைவாசம் என்பது ஜூன் 11 முதல்
தொடங்குகிறது. தீர்ப்பு வந்த நாளான 1997 ஜனவரி
அன்று கணக்குப் போட்டுப் பார்த்தால், அவர் மீதான
தீர்ப்பின்படி,
1) 3 மாதக் கடுங்காவல் 2) ஓராண்டுக் கடுங்காவல்
3) 2 ஆண்டுக் கடுங்காவல் 4) மூன்றாண்டுக் கடுங்காவல்
ஆகிய தண்டனைகளை அனுபவித்து முடித்து விட்டார்.
**
அன்றைய தினத்தில் எஞ்சி இருக்கும் தண்டனைகளை
( இரண்டு ஆயுள் தண்டனை, ஒரு மரண தண்டனை)
மட்டுமே அவர் அனுபவிக்க வேண்டி இருந்தது.
**
உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், இரண்டு ஆயுள்
தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.  மரண தண்டனை
மட்டுமே மிச்சம் இருந்தது. அதுவும் பின்னர், நீதியரசர்
சதாசிவம் அவர்களின் தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டு,
ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டது.
**
தற்போது இந்த ஒரு தண்டனை மட்டுமே
(ஆயுள் தண்டனை) எஞ்சி இருக்கிறது. அதை அவர்
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
**
முந்தைய பதிவுகளில் விரிவாகக் குறிப்பிடப்
பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக