ஈழப்போராட்டத்தை வரிந்து கட்டிக்கொண்டு
ஆதரித்த எம்.ஜி.யார்! ஆதாரம் பாரீர்!!
-------------------------------------------------------------------------------------
1985ஆம் ஆண்டு; அல்லது அதை ஒட்டிய காலக் கட்டம்.
ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்து கொண்ட
எங்களை அன்றைய எம்ஜியார் அரசு கைது செய்தது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்ட எங்களை 15 நாள் ரிமான்ட்டில்
வைத்தார் மாஜிஸ்டிரேட்.
எங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. காரணம்
எங்களைக் கைது செய்த காவல் துறை அதிகாரி
எங்கள் மீது 124A பிரிவில் வழக்குப் போட்டு இருந்தார்.
எனவே சென்னை மத்திய சிறையில் அடைக்கப்
பட்டோம்.
124A என்பது கொடிய சட்டப் பிரிவு. தேசத்துரோகக்
குற்றச்சாட்டு. பின்னர் அந்த 124Aயை நாங்கள்
சுக்கல் சுக்கலாக நொறுக்கி எம்ஜியார் அரசின் மீது
காரி உமிழ்ந்தோம் என்பது தனிக்கதை. அதைப்
பின்னர் பார்க்கலாம்.
சிறையில் இருந்தபோது ஈழ ஆயுதக் குழுக்களில்
பலரும் அப்போது சிறையில் இருந்தனர். அவர்களுடன் பழகியதில், அவர்களில் ஒரு தோழருக்கு ஒரு உதவி
செய்வதாக வாக்குக் கொடுத்து இருந்தேன்.
அதையொட்டி அன்றைய திமுக எம்.எல்.ஏ திருச்சி
மலர்மன்னன் அவர்களைச் சந்தித்து உதவி
கேட்பதாகத் திட்டம்.
சிறையில் இருந்து விடுதலையாகி, அலுவலகம்
சென்று விட்டு. மறுநாள் திருச்சி சென்றேன்.
ஆனால் மலர்மன்னனைச் சந்திக்க எவ்வளவோ
முயன்றும் முடியவில்லை. அவரின் வீட்டுக்குச்
சென்றும், கட்சி அலுவலகத்திற்குச் சென்றும் கூட
அவரைச் சந்திக்க இயலவில்லை. எனவே சென்னை
திரும்ப நேர்ந்தது.
பின்னர்தான் எம்ஜியார் அரசின் போலிசினால்,
மலர்மன்னன்அவர்கள் சட்ட விரோதமாகக்
கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில்
தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அடிக்கப்
பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டோம். நாடே
தெரிந்து கொண்டது.
திருச்சியில் அடைக்கலராஜ் குடும்பம் மிகவும்
பிரபலமானது. அடைக்கலராஜ் தொடர்ந்து
காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர். அவரின் தம்பிதான்
புஷ்பராஜ். இவர் திமுகவில் இருந்ததால், தமிழ்ப்பற்று
காரணமாக மலர்மன்னன் என்று பெயர் மாற்றிக்
கொண்டவர். வைகோ கட்சி ஆரம்பித்தபோது,
அவருடன் மதிமுகவுக்குச் சென்றவர் மலர்மன்னன்.
தற்போது மலர்மன்னன் உயிருடன் இல்லை. முன்பே
அவர் இறந்து விட்டார்.
ஈழ ஆதரவாளர்கள் அனைவரையும் சிறையில்
அடைத்து போலிஸ் ராஜ்ஜியம் நடத்தியவர் எம்ஜியார்.
எம்ஜியாரின் ஈழ ஆதரவு என்பது இதுதான். இது
வரலாறு.
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக