ஞாயிறு, 12 ஜூன், 2016

இந்திரா-ராஜீவ் படுகொலைகள் ஒரு ஒப்பீடு!
இந்திரா கொலையாளிகள் தூக்கில் போடப்பட்டனர்!
----------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 31,
1984 அன்று காலை 9 மணியளவில் இந்திரா காந்தியை
அவரின் மெய்க்காப்பாளர்களே சுட்டுக் கொன்றனர்.

பியாந்த் சிங், சத்வந்த் சிங் என்ற இரண்டு சீக்கிய
மெய்க்காவலர்கள் இந்திராவைச் சுட்டுக் கொன்றனர்.
இதில் பியாந்த் சிங் மற்றக் காவலர்களால் அந்த
இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சத்வந்த் சிங்
கைது செய்யப்பட்டார்.

வழக்கு நடைபெற்றது. சத்வந்த் சிங், கேஹர் சிங்,
பல்பீர் சிங் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை
கிடைத்தது. உச்சநீதிமன்றம் பல்பீர் சிங்கை விடுதலை
செய்தது. ராம் ஜெத்மலானி பல்பீர் சிங் சார்பாக
வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகிய இருவரும் 1989 ஜனவரி
6ஆம் நாள் தூக்கில் இடப்பட்டனர். அவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவில்லை.
சிறையிலேயே எரியூட்டப் பட்டன.

ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதி மன்றம்
மரண தண்டனை வழங்கியது. இதில் 22 பேரின்
மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நான்கு பேரின் ( நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன்)
மரண தண்டனை மட்டுமே உறுதி செய்யப் பட்டது.

இதில் நளினியின் மரண தண்டனையை கலைஞர்
அரசு ரத்து செய்தது. மற்ற மூவரின் மரண தண்டனையை
உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் விளைவாக
ராஜீவ் கொலை வழக்கில் யாருக்கும் மரண தண்டனை
இல்லை என்பது உறுதியானது.

இந்திய நீதித் துறையின் வரலாற்றிலேயே, 22 மரண
தண்டனைகள் ரத்து செய்யப் பட்டது ராஜீவ் கொலை
வழக்கில்தான். இந்த 22 பேரிலும் 19 பேர் முற்றிலுமாக
விடுதலை செய்யப்பட்டனர். மூவரின் ( ராபர்ட் பயாஸ்,
ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) மரண தண்டனை ஆயுள்
தண்டனையாக மாற்றப் பட்டது.

இந்திரா கொலை வழக்கில் மொத்தமே இரண்டு பேருக்கு
மட்டும்  மரண தண்டனை. அதுவும் நிறைவேற்றப்பட்டு
அந்த இருவரும் (சத்வந்த் சிங், கேஹர் சிங்) தூக்கில்
இடப்பட்டனர்.
**********************************************************


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக