புதன், 18 பிப்ரவரி, 2015

கருத்துரிமைப் போலிகள்!
அஞ்சி நடுங்கும் கோழைகள்!!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து 
ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளது மோடியின் அரசு.
2015 பிப்ரவரி முதல் இந்தத் தடை நீடிக்கப் பட்டுள்ளது 
என்பதையும் நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். 
**
விடுதலைப் புலிகள் முற்றிலுமாகத் துடைத்து எறியப் பட்டு 
விட்டார்கள் என்று சிங்கள ராஜபக்சே அரசும், இந்திய 
மன்மோகன் அரசும் அறுதியிட்டுக் கூறியபின்னால், 
இந்தத் தடைக்கு எவ்வித நியாயமும் இல்லை. 
**
ஆனாலும், மோடி அரசின் இந்தத் தடை நீட்டிப்பை  
எதிர்த்து, கருத்துரிமைப் போராளிகளாகத் தங்களை 
வரித்துக் கொண்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ 
அமைப்புகளோ தனிநபர்களோ இதுவரை வாய் 
திறக்கவில்லை.
**
பின் நவீனத்துவ எழுத்தாளர் பெருமாள் முருகனின் 
நூலுக்கு எதிர்ப்பு வந்தபோது, தமிழகத்தில் உள்ள 
ஒவ்வொரு குட்டி முதலாளித்துவப் போலியும் 
பெருமாள் முருகனின் கருத்துரிமையை ஆதரித்து 
புரட்சியின் உச்சத்தைத்  தொட்டான்.
**
கருத்துரிமைக் காவலனாக இருந்து கொண்டா இவன் 
பெருமாள் முருகனை ஆதரித்தான்? இல்லை, இல்லவே 
இல்லை. பெருமாள் முருகனின் சர்ச்சைக்குரிய 
மாதொருபாகன் நூலை தமிழக அரசோ, மத்திய அரசோ,
நீதிமன்றமோ தடை செய்யவில்லை. எனவே, பெருமாள் 
முருகனின் கருத்துரிமையை ஆதரிப்பதில் எந்தவொரு 
ஆபத்தும் இல்லை என்பதால் இவன் பெருமாள் முருகனை 
ஆதரித்து எல்லை தாண்டிய புரட்சி செய்தான்.
**
ஆனால் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 
ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என்று மத்திய அரசு 
உத்தரவு வெளியிட்டபோது, இந்தக் கருத்துரிமைக் 
காவலர்கள் எல்லோரும் தலைமறைவாகிப் 
போனார்கள். தடையைக் கண்டிக்க இவர்களில் ஒரு பயலும் முன்வரவில்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல இந்தக் கயவர்கள் கிரிமினல்தனமான மௌனம் 
காத்தார்கள்.
**
பெப்ரவரி 2015இல், புலிகளின் மீதான தடையை எதிர்த்துக் 
கருத்துக்கூற முயன்றபோது, கேப்டன் நியூஸ் டி.வி.,
வின் டி.வி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே 
நமக்கு அந்த வாய்ப்பைத் தந்தன. பிரபலமாக இருக்கும் 
இரண்டு டி.வி.கள் அந்த வாய்ப்பைத் தரவில்லை.
இந்தத் தடையை மிகக் கடுமையாகக் கண்டித்து 
முதல் குரல் கொடுப்பதற்கான வாய்ப்பை நியூட்டன் 
அறிவியல் மன்றத்துக்கு வழங்கிய வின், கேப்டன் 
டி.வி.க்களுக்கு நன்றி.
********************************************************************       
பின்குறிப்பு: பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் 
கொடுப்பது தவறு என்று இப்பதிவு கூறவில்லை. அவ்வாறு 
புரிந்து கொள்வது பிறழ் புரிதல் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------------     






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக