திங்கள், 16 பிப்ரவரி, 2015

மார்க்சிஸ்ட் கட்சியைக் கலைப்பதுதான் நியாயம்!
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------
1) ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெறும் 1552 வாக்குகளை மட்டுமே
பெற்று, தமிழக அரசியல் களத்தில் பரிபூரண முக்தி அடைந்துள்ளது
மார்க்சிஸ்ட் கட்சி.
2) நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1919. இதை விட 367 வாக்குகள்
குறைவாகப் பெற்று, கேவலத்தின் உச்சத்தை அடைந்துள்ளது
மார்க்சிஸ்ட் கட்சி.
3) டிராபிக் ராமசாமி என்ற படு கிழவரான ஒரு ஒற்றைத்
தனி மனிதரும் இத்தேர்தலில் போட்டியிட்டார். அவர் 1167 வாக்குகள் 
பெற்று விட்டார்.
4) மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக  CPI, CPM தலைவர்கள் மற்றும் 
AITUC, CITU ,NFTE,,BSNLEU, AIBEA, BEFI உள்ளிட்ட பிரபல தொழிற்சங்கங்கள்,
DYFI மற்றும் இளைஞர் பெருமன்றங்கள், SFI உள்ளிட்ட மாணவர் 
அமைப்புகள் என்று ஏகப்பட்ட கட்சி அமைப்புகள் பிரச்சாரம் 
செய்தனர். அதன் பிறகும் பெற்றது வெறும் 1552 வாக்குகள்தான?
5) டிராபிக் ராமசாமிக்குள்ள ஆதரவை விட, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
உள்ள ஆதரவு குறைவு என்பதைத்தானே இது எடுத்துக் 
காட்டுகிறது!
6) ஸ்ரீரங்கத்தின் மொத்த வாக்காளர்கள் 2,70,281. (தி இந்து, 1402.2015).
மார்க்சிஸ்ட்கள் பெற்றது 1552. இது 0.57 சதவீதம். ஒரு சதவீத 
வாக்குகளைக்கூடப் பெற முடியவில்லையே! 
7) மக்கள் ஆதரவு இல்லாமல் கட்சி நடத்துவதில் ஏதேனும் 
அர்த்தம் உண்டா? பயன் உண்டா?
8) டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பதினைந்து 
இடதுசாரிக் கூட்டணி வேட்பாளர்களில் ஒருவர் கூட 1000 வாக்குகள் பெற முடியவில்லை. அதற்கு ஸ்ரீரங்கம் தேவலாம் என்று நினைக்கிறார்களா 
மார்க்சிஸ்ட் தலைவர்கள்!
9) மக்கள் முட்டாள்கள் அல்ல. போலிக் கம்யூனிஸ்ட்களை  விட
கம்யூனிசத்தின் எதிரிகளே மேல் என்று தீர்மானிக்கிறார்கள் 
மக்கள்.
10) இனி முடிவு எடுக்க வேண்டியது மார்க்சிஸ்ட் கட்சிதான்.
கட்சியைக் கலைப்பது எப்போது என்பதுதான் இன்று மக்கள் 
கேட்கும் கேள்வி.
11) இந்தியாவில், தமிழ்நாட்டில் கம்யூனிசம் வளர வேண்டும் 
என்றால், போலிகளான CPI, CPM கட்சிகள் கலைக்கப்பட 
வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது.
************************************************************8    
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக