ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

(2) மார்க்சியத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் 
நடைபெற்ற வெற்றிகரமான கியூபப் புரட்சி!
------------------------------------------------------------------------------
கியூபப் புரட்சியின் நிகழ்வுகள்: சுருக்கமான வரலாறு! 
--------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------------- 
1) கியூபப் புரட்சியின் தொடக்கமாக ஜூலை 26,1953 அன்று 
நடைபெற்ற, சாந்தியாகு நகரில் உள்ள, மான்கடா (MONCADA)
ராணுவக் காப்பரண்கள் மீதான  பிடெல் காஸ்ட்ரோ தொடுத்த 
தாக்குதல் கருதப் படுகிறது.
2) எனினும், இது வெறும் அடையாளமான தொடக்கமே.
மெய்யான தொடக்கம் அல்ல.
**
3) இத்தாக்குதல் முறியடிக்கப் பட்டது. காஸ்ட்ரோ உள்ளிட்ட 
பலர் சிறைப் பட்டனர். கியூபாவின் பட்டிஸ்டா அரசு இவர்கள்மீது 
விசாரணை நடத்தியது. செப்டம்பர் 21, 1953 முதல் அக்டோபர் 6, 1953
வரை நடந்தது.
4) இந்த விசாரணையின்போதுதான்,"வரலாறு என்னை விடுதலை 
செய்யும்" (HISTORY WILL ABSOLVE ME) என்ற புகழ்பெற்ற 
வழக்குமன்ற உரையை காஸ்ட்ரோ வெளியிட்டார்.
**
5) காஸ்ட்ரோ உள்ளிட்டோர் தண்டிக்கப் பட்டனர். பின்னர், 
பாட்டிஸ்டா அரசு வழங்கிய பொதுமன்னிப்பின் விளைவாக 
விடுதலை ஆயினர்.
6) காஸ்ட்ரோ உள்ளிட்ட போராளிகள் மெக்சிகோ நாட்டுக்குச் 
சென்றனர். அங்கு ஒரு கொரில்லாப் படையை அமைத்தனர்.
மொத்தமே 82 பேர் மட்டுமே இப்படையில் இருந்தனர்.
**
7) மெக்சிகோவில் அர்ஜென்டினா நாட்டுப் புரட்சியாளர் 
டாக்டர் சே குவேராவை, 1955 ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 
காலக் கட்டத்தில், காஸ்ட்ரோ சகோதரர்கள் சந்தித்தனர்.
இதுவே அவர்களின் முதல் சந்திப்பு.
8) காஸ்ட்ரோவின் படையில் சே இணைந்தார்.
9) காஸ்ட்ரோவின் இயக்கம் "26 ஜூலை இயக்கம்" என்ற 
பெயரில் அழைக்கப் பட்டது. (26TH JULY MOVEMENT).
**
10) காஸ்ட்ரோ-சே உள்ளிட்ட 82 பேர் கொண்ட கொரில்லாப் படை 
படகில் பயணித்து, டிசம்பர் 2, 1956 அன்று கியூபாவை அடைந்தது.
11) கியூபா ராணுவம் இவர்களைத் தாக்கியது. 82 பேரில் 
பலர் உயிரிழந்தனர். பலர் சிறைப்பட்டனர். காஸ்ட்ரோ 
சகோதரர்கள் சே உள்ளிட்டோர் தப்பினர். இந்நிகழ்வே 
கியூபப் புரட்சியின் அதிகாரபூர்வமான தொடக்கம் என்று 
ஏற்றுக் கொள்ளப் பட்டது.
**
12) அன்று தொடங்கிய கியூபப் புரட்சி, கியூபா சர்வாதிகாரியும் 
அமெரிக்க அடிவருடியும் ஆகிய பாட்டிஸ்டா 1959இல் புத்தாண்டு 
தொடங்கு முன்பே ஸ்பெயினுக்குத் தப்பி ஓடும் வரை 
 நடந்தது.
13) ஆக, கியூபப் புரட்சி என்பது 1956 டிசம்பர் முதல், 1958 டிசம்பர் 
வரை இரண்டு ஆண்டு காலம் மட்டுமே நடைபெற்றது.
**
14) 1959 புத்தாண்டு முதல் நாள் அன்று கியூபப் புரட்சி 
வெற்றி பெற்றது.
15) பெப்ரவரி 16, 1959இல் பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் 
பிரதமராகப் பதவி ஏற்றார். ஆக, புரட்சி முடிந்து அரசு 
அதிகாரத்தை பிடெல் கைப்பற்றினார்.
**
16) புரட்சி நடத்தியது முதல், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது வரையிலும்,அதன் பிறகு சில காலத்துக்கும், தமது 
" ஜூலை 26, 1953"என்ற இயக்கத்தின் பெயரிலேயே 
எல்லாவற்றையும் நடத்தினார் காஸ்ட்ரோ.
17) கம்யூனிஸ்ட் கட்சிபுரட்சியில் பங்கு பெறவில்லை. 
**
புரட்சியானது முழுக்க முழுக்க, காஸ்ட்ரோ-சே தலைமை
ஏற்ற M-26-7 என்ற இயக்கத்தின் பெயராலேயே 
நடந்தது.
18) பின்னர் 1965இல்தான் கியூபாவின்  கம்யூனிஸ்ட் கட்சியை 
அமைத்தார் காஸ்ட்ரோ.
**
19) கியூபப் புரட்சியின் சுருக்கமான துல்லியமான வரலாறு 
இதுதான். இது மட்டும்தான்.              
20) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் தன்னைக் 
கம்யூனிஸ்ட் என்றோ, தன் கட்சியைக் கம்யூனிஸ்ட் கட்சி 
என்றோ காஸ்ட்ரோ அழைத்துக் கொள்ளவில்லை.
----------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.

***************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக