செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இந்தக் கட்சியில் இருப்பதைவிட, 
நாண்டுக்கிட்டு நின்னு சாகலாம்!
குமுறுகிறார்கள் தோழர்கள்!! 
-------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------- 
 1) ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.  
2) தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியின் 
அதிகார துஷ்பிரயோகத்தாலும், பணபலத்தாலும் மட்டுமே 
தீர்மானிக்கப் படுகிறது. மக்கள் சுதந்திரமாகச் சிந்தித்து 
வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் 
களேபரத்துக்கு நடுவில், சிறிய கட்சிகளுக்கு மக்களிடம் 
இருக்கும் மெய்யான ஆதரவை இடைத்தேர்தல் பிரதிபலிக்காது 
என்றார் திருமாவளவன்.
3) இடைத்தேர்தல் குறித்து சட்டத் திருத்தம் செய்து, தேர்தல்
முறையில் சீர்திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே, இடைத்தேர்தல்கள் 
நியாயமாக நடக்கும் என்றார் திருமா.
4) அரசியல் வல்லுனர்களும், சமூகவியல் அறிஞர்களும் 
திருமா கூறியது நூற்றுக்கு ஆயிரம் மடங்கு உண்மை என்று 
உணர்ந்தே இருக்கின்றனர்.
5) ஆனால், "தேவதைகள் நுழையத் தயங்கும் இடத்தில் 
முட்டாள்கள் வேகமாக நுழைந்து விடுவார்கள்" என்ற 
பழமொழிக்கே ஏற்ப, போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான
CPM கட்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டது.
6) விளைவு: நோட்டாவை விடக் குறைவான வெறும் 1500
வாக்குகள் மட்டுமே பெற்றுக் கேவலப் பட்டது.
7) இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தக் கேவலத்தை 
மார்க்சிஸ்ட் தலைமை எதிர்பார்த்தே இருந்தது. தெரிந்தேதான் 
மலத்தை வாரி முகத்தில் பூசிக் கொண்டது.
8) ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டதன் ஒரே   
நோக்கம் ஜெயலலிதாவைத் திருப்திப் படுத்துவதுதான்.
9) அம்மா பாருங்கள், நாங்கள் திமுகவுடன் போகமாட்டோம்,
உங்களுடன்தான் இருக்கிறோம் என்று அம்மாவுக்கு ஒரு 
குறிப்புக் காட்டத்தான் மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில் 
போட்டியிட்டது.
10) கட்சியின் மானம் போனாலும் பரவாயில்லை, அம்மாவின் 
முகம் மலர வேண்டும் என்ற ஒரே புரட்சிகரமான நோக்கத்துடன் 
மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டது.
11) தனது நோக்கம் நிறைவேறிவிட்ட திருப்தியில், மார்க்சிஸ்ட் 
தலைமை பரம சந்தோஷத்தில் இருக்கிறது.
12) பாவம், அப்பாவித் தொண்டர்கள்! உயிரைக் கொடுத்து 
உழைத்தும் ஒரு இரண்டாயிரம் ஓட்டுக் கூடக் கிடைக்க 
வில்லையே என்று சோர்ந்து போய் இருக்கிறார்கள்.
13) கட்சியின் பார்ப்பனத் தலைமையின் சாணக்கிய சூழ்ச்சி 
புரியாத அப்பாவிகள்!
14) இதுதான், இப்படித்தான் நடக்கும் என்று அன்றே சொன்னோம் 
நாம். அது அப்படியே நடந்துள்ளது.
15) போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளில்  தொண்டர்களாக 
இருப்பதை விட, நாண்டுக்கிட்டு நின்னு சாகலாம் என்கிறார் 
இசக்கிமுத்து அண்ணாச்சி!
**************************************************************88 


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக