தோழர் மகேஷ் ராமநாதன் அவர்கள் கவனத்திற்கு,
---------------------------------------------------------------------------------
படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதுவது சரியானதாகவும்
துல்லியமானதாகவும் இருக்கும். ஏனெனில், இது objective
assessment. ஆனால், படத்தைப் பற்றிய peripheral தகவல்களின்
அடிப்படையில் எழுதப்படும் விமர்சனம் யதார்த்தத்தைப்
பிரதிபலிக்காது; அது விமர்சகரின் அகநிலை விருப்பத்தை
மட்டுமே வெளிப்படுத்தும். கமலின் குடும்பம் ஒரு நாடார்
குடும்பம் என்பது படத்தில் எள்முனையேனும் வெளித்
தெரியவில்லை.
**
எனது புலன்களின் தீட்சண்யம் குறித்த மெலிதான ஐயம்
எனக்கு இருந்ததால், படம் பார்த்த பல இளைஞர்களிடம்
(எல்லோரும் திருநெல்வேலிக்காரர்கள், வயது 20-30)
கமலின் நாடார் சாதிப் பின்னணி படத்தில் தெரிகிறதா
என்று கேட்டேன். எல்லோரும் இல்லை என்றார்கள்.
எங்கள் ஊர் ஆட்கள் கூட (வீரவநல்லூர், பாபநாசம்,
சிங்கை) அப்படி எதுவும் இல்லை என்று அடித்துக்
கூறினார்கள். நான் ஒரு முறை மட்டுமே பார்த்தேன்.
ஆனால் இவர்கள் எல்லாம் இரண்டு மூன்று முறை
பார்த்தவர்கள்.
**
சாதியப் பிடிப்பு கொண்ட ஜெயமோகன், பாத்திரங்களுக்கு
ஒரு சாதியப் பின்னணியை அளிக்க முயன்று இருக்கலாம்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, அவர் அதில் தோல்வி அடைந்து
இருக்கிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஜெயமோகன் வாக்கு
வேத வாக்கல்ல. எனவே விமர்சகர் திரு மகேஷ் ராமநாதன்,
ஜெயமோகனின் கூற்றை ஒதுக்கி விட்டு, objective ஆக
விமர்சனம் செய்திருக்க வேண்டும்.அல்லது குறைந்த பட்சம்
சாதி பற்றிய தகவல்களை எழுத்தில் பதிவு செய்வதைக்
கண்டிப்பாகத் தவிர்த்து இருக்க வேண்டும். நாடார் என்ற
பதிவைத் தவிர்ப்பதால், அவரின் விமர்சனம் மூளியாகி
விடப் போவதில்லை.
**
அடுத்து, படத்தில் மதவாதம் இருக்கிறது என்கிற
விமர்சகரின் கண்டுபிடிப்பு எள்ளி நகையாடத் தக்கதாகவே
இருக்கிறது.பாபநாசத்தில் குளித்தால் பாவம் தொலையும்
என்பது நெல்லை மாவட்டத்து எளிய மக்களின் நம்பிக்கை.
இதைப் படத்தில் பிரதிபலிப்பது மதவாதம் ஆகாது.
இது மூட நம்பிக்கைதான். அதற்காக, நெல்லை
மாவட்டத்து மக்களை சுட்டுக் கொல்ல வேண்டுமா?
அறிவியல் ஆழமாகப் பரவும்போது, மூடநம்பிக்கைகள்
சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.
**
ஜெயமோகன் மீது ஓங்குகிற கத்தி, குறி தவறி
நெல்லை-பாபநாசம் மக்கள் மீதல்லவா பாய்ந்து விடுகிறது!
**
இணையதளத்தில் உள்ள கட்டற்ற சுதந்திரத்தை
அனுபவிப்பவர்கள் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களும் பின்நவீனத்துவ ஆர்வலர்களும் மட்டுமே.
நியூட்டன் அறிவியல் மன்றம் தன்னுடைய கருத்துகளுக்கு
முற்றிலுமாகப் பொறுப்பேற்கிறது. முகநூல் மட்டுமின்றிப்
பிற பொதுவெளிகளிலும் தன் கருத்துகளை முன்வைக்கிறது.
அஞ்சுவதில்லை; ஓடி ஒளிவதில்லை. மாற்றுக்
கருத்துக்களைக் களத்தில் சந்திக்கிறது. தொடர்ந்து
சந்திக்கும்.
**
சினிமா விமர்சனம் நமது வேலையே அல்ல. பாபநாசம்
படத்தின் மூல நாவல் ஓர் அறிவியல் அற்புதம். எனவேதான்
இது குறித்த அறிவியல் ரீதியான எம் கருத்தை வெளியிட்டோம்.
மற்றப்படி, சினிமா விமர்சனம் எம் குலத்தொழில் அல்ல.
....தோழமையுடன், நியூட்டன் அறிவியல் மன்றம்......
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக