வியாழன், 30 ஜூலை, 2015

முதுகெலும்பை முறிக்கும் பதில்-1
-----------------------------------------------------------
வெங்கட்ராமனும் அப்துல் கலாமும்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் பிறந்து  இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த
தமிழர்கள் இருவர். ஒருவர் ஆர் வெங்கட்ராமன்; இன்னொருவர் 
அப்துல் கலாம். இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
**
2) 98 வயது வரை வாழ்ந்து 2009இல் மறைந்த வெங்கட்ராமன் 
1987-1992 காலக்கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தார்.
83 வயது வரை வாழ்ந்து அண்மையில் மறைந்த அப்துல் கலாம் 
2002-2007 காலக்கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தார். முன்னவர் 
முழுநேர அரசியல்வாதி. பின்னவர் முழுநேர விஞ்ஞானி.
**
3) வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தபோது, தலித் 
நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அவமதித்த ஒரு 
சம்பவம் நடந்தது. இது நாடெங்கும் பலத்த கண்டனங்களை 
எழுப்பியது. விஷயம் இதுதான்.
**
4) ஆந்திராவில் ஒரு கிராமத்தில் சாதி வெறியர்கள் தலித் 
பெண்களை நிர்வாணம் ஆக்கி ஓட விட்டனர். காவல்துறை 
புகாரையே ஏற்றுக் கொள்ளவில்லை. இது மட்டுமின்றி 
நாட்டின் வேறு பல இடங்களிலும் தலித்துகள் மீது 
தாக்குதல்கள் நடைபெற்றன. இது பற்றி, நடவடிக்கை 
எடுக்க அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, ஜனாதிபதியைச் 
சந்தித்து முறையிட, நூற்றுக்கும் மேற்பட்ட, எல்லாக் 
கட்சிகளையும் சேர்ந்த (காங்கிரஸ் உட்பட) தலித் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால்,ஜனாதிபதி வெங்கட்ராமன் தலித் எம்.பி.க்களைச் சந்திக்க மறுத்து விட்டார்.
**
5) தலித்தாக இருக்கிற, குப்பனையோ சுப்பனையோ 
வெங்கட்ராமன் சந்திக்க மறுக்கவில்லை. தலித் 
எம்.பி.க்களையே சந்திக்க மறுத்தார். இந்த எம்.பி.க்கள்தான் 
வாக்களித்து வெங்கட்ராமனையே தேர்ந்து எடுக்கின்றனர்.
தம்மைத் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களையே சந்திக்க 
மறுத்தவர்தான் இந்த வெங்கட்ராமன். 
**
6) அதே நேரத்தில், எவர் வேண்டுமானாலும் தம்மைச் 
சந்திக்கலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் 
கலாம். ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட 
விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, சுலபமாக 
அனைவரும் பார்வையிட வழி வகுத்தவர் கலாம்.
**
7) சாதி வெறியர் என்று நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் 
போன, வெங்கட்ராமனைக் கண்டிக்க முன்வராத பல 
குட்டி முதலாளித்துவ ஜென்மங்கள்தான் கலாம் மீது 
கல்லெறிந்து கொண்டு இருக்கின்றனர்.
**
8) இவர்கள் வெங்கட்ராம அய்யரின் சாதிவெறியைக் 
கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள். இவர்களை  
பார்ப்பன அடிவருடிகள் என்று சொல்லக் கூடாது.
இவர்கள் பார்ப்பன மலம் உண்ணிகள். இவர்கள்தான் 
அப்துல் கலாம் மீது கல் எறிபவர்கள்.
**
9) கலாம் மீது வெறியோடு கல்லெறியும் இவர்களில் 
எவன் ஒருவனாவது வெங்கட்ராம அய்யரின் சாதி 
வெறியை என்றாவது கண்டித்து இருக்கிறானா? 
"நான் கண்டித்து இருக்கிறேன்" என்று இவர்களில் 
யாராவது சொல்ல முடியுமா?   
-------------------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************** 
    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக