வெள்ளி, 24 ஜூலை, 2015

1) ராஜீவ் மரணம் குறித்து பல தியரிகள் (theories) உள்ளன. கார்த்திகேயன் 
முன்வைத்த தியரியான "புலிகள்தான் ராஜிவைக் கொன்றார்கள்"
என்ற தியரியில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. என்றாலும் 
கார்த்திகேயன் இதுவரை எதற்கும் பதில் அளிக்கவில்லை.  
2) சோனியாதான் ராஜிவைக் கொன்றார் என்கிறார் டாக்டர் 
சுப்பிரமணியன் சுவாமி; புத்தகமே எழுதி உள்ளார். 
இதுவும் ஒரு தியரி.
3) புலிகள்தான் கொன்றார்கள் என்று முடிவு செய்துவிடக் கூடாது.
இதில் விரிவான சர்வதேசச் சதி இருக்கக்கூடும் என்று மத்திய 
அரசு முடிவு செய்தது. இந்த விரிவான சதியை (wider conspiracy)
ஆராய பல்நோக்கு விசாரணைக் குழுவையும் மத்திய அரசு 
அமைத்தது. ஆக, விரிவான சதி என்பது இன்னொரு தியரி.
4) ராஜீவ் மரணம் ஒரு விபத்தே என்பது எங்கள் நியூட்டன் 
அறிவியல் மன்றம் முன்வைத்த ஒரு தியரி. கார்த்திகேயனின் 
அஸ்திரங்களுக்கு எதிர் அஸ்திரமாக இந்த தியரியை நாங்கள் 
முன்வைத்துள்ளோம்.
5) இவ்வாறு உள்ள பல தியரிகளில் எது சரி என்பது இன்னும் 
முடிவாகவில்லை என்பதே உண்மை.
***
6) நிற்க.பல தியரிகள் இருந்தாலும், தமிழக மக்களும் இந்திய 
மக்களும் புலிகள்தான் ராஜிவைக் கொன்றார்கள் என்று ஏற்றுக் 
கொண்டுள்ளார்கள்.அப்படியானால், புலிகள் ஏன் ராஜிவைக் 
கொன்றார்கள், அப்படிக் கொன்றதில் நியாயம் உள்ளதா என்ற 
கேள்வியை எழுப்பி, அதற்கு விடை காண வேண்டும். ஆனால்,
துரதிருஷ்ட வசமாக, இந்தக் கேள்விக்கு உள்ளேயே போக 
மறுக்கிறார்கள் தமிழ்நாட்டின் புலி ஆதரவாளர்கள் (வைகோ,
நெடுமாறன் போன்றோர்).
7) ராஜீவ் கொலை நியாயம் என்று தமிழ்ச் சமூகம் மொத்தமும் 
உணர்ந்தால் மட்டுமே, ராஜீவ் கொலையாளிகளை உடனே 
விடுதலை செய்ய வேண்டும் என்ற மக்கள் கருத்து வலுப்பெறும்.
அது ஆட்சியாளர்களை நிர்ப்பந்தம் செய்யும்.
8) இதையே நமது பதிவு குறிப்பிடுகிறது. எனவே, நமது 
கருத்துக்களில் எவ்வித முரண்பாடும் இல்லை. இன்னும் 
விளக்கம் தேவைப்படின், தயக்கமின்றிக் கேட்கலாம்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக