வெள்ளி, 24 ஜூலை, 2015

நெகிழ்ச்சியான மனிதாபிமானம் என்னும் ஒற்றை அளவுகோலை 
வைத்துக் கொண்டு ராஜீவ் கொலை சார்ந்த விடயங்களைப் 
பார்க்கிறீர்கள். இவ்வாறு பார்ப்பது மக்களின் இயல்புதான்.
என்றாலும், அரசியல் என்பது மனிதாபிமானத்தை மட்டுமே 
கொண்டதல்ல. சூழ்ச்சிகள், சதிவலைகள், படுகொலைகள்,
துரோகங்கள் என்று பலவிதமான தீமைகளைக் கொண்டதே 
அரசியல்.
**
ராஜீவ் கொலையில் இன்னமும் விலகாத மர்மங்கள் ஏராளம்.
அஞ்சும் மூணும் எட்டு என்பது போல், எளிமையாகப் புரிந்து 
கொள்ளவே முடியாத அளவு இடியாப்பச் சிக்கல்கள் 
நிறைந்தது ராஜீவ் கொலை.
**
இந்தப் பதிவில் நான் கூறுவது இந்த ஒரு விடயம்தான்:
1) எழுவர் விடுதலையைப்  பொறுத்த மட்டில்,நீதிமன்றம் 
சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே இழவு காத்த கிளியாக ஏமாற வேண்டாம்.
2) மக்கள் போராட்டங்கள் மூலமாகவே விடுதலையைப் 
பெற முடியும்.
3) மக்கள் போராட்டம் சாத்தியமா? ராஜீவ் கொலை 
நியாயமானது என்று மக்கள் கருதினால் மட்டுமே, 
மக்கள் போராடுவார்கள்.
4) மக்கள் அப்படிக் கருதவில்லை என்றால், போராட 
மாட்டார்கள். போராடாவிட்டால் விடுதலை கிடைக்காது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக