வியாழன், 9 ஜூலை, 2015

பிறழ் புரிதல் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் தாங்கள் புரிந்து
கொண்ட விதம். கோதையனாரின் பாடல் மெய்யானது. அது
எளிய சில பித்தகோரியன் எண்களைப் பற்றி மட்டுமே கூறுகிறது.
அதை வைத்துக் கொண்டு, போலிப்பெருமை பேசும் நபர்களை
மட்டுமே இப்பதிவில் உள்ள கட்டுரை கண்டிக்கிறது.
**
கோதையனாரின் சூத்திரம் 3,4,5 மற்றும் 5,12,13 ஆகிய இரு
பித்தகோரியன் டிரிப்லெட்டுகளுக்கு மட்டுமே பொருந்துவது;
ஏனையவற்றுக்குப் பொருந்தவில்லை என்று நிரூபித்துள்ளோம்.
இதன் பொருள் அது போலிச் சூத்திரம் என்பதல்ல. மாறாக,
கோதையனார் எளிய சில பித்தகோரியன் டிரிப்லெட்டுகள்
பற்றி அறிந்து இருந்தார் என்பதன் ஆதாரம் ஆகும்.
**
கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்கம் இருக்கிறது.
அறிவியல் கட்டுரைகளைப் புரிந்து கொள்ள, அறிவியலில்
நல்ல பரிச்சயம் இருப்பது அவசியம் ஆகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக