வியாழன், 16 ஜூலை, 2015

//////.... மதரீதியான பாவ விமோசனங்களைக் கேட்டு 
ஆபத்தான மதவாதம் கலந்த பொழுதுபோக்கான படமாக 
ஆகிவிடுகிறது.//////
**
1) பாவ விமோசனம் கேட்கிறார் கமல் என்பது அபத்தமாக உள்ளது.
பாவ விமோசனத்தைக் கோவிலிலோ கடவுளிடமோ அல்லது 
சாமியாரிடமோ தான் கேட்பார்கள். போலிஸ் அதிகாரியிடம் யாரும் 
பாவ விமோசனம் கேட்க மாட்டார்கள். எனவே இது பிறழ் புரிதலே.
பாவ விமோசனம் கேட்பவர்கள் பாவநாசம் ஆற்றில் ஒரு முங்கு 
போடுவார்கள். அப்படி ஒரு காட்சி படத்தில் இல்லை என்னும்போது,
பாவ விமோசனம் கேட்கிறார் என்பது கற்பனையே. பாவனாசத்திற்கு 
அருகில் உள்ள வீரவநல்லூரைச் சேர்ந்தவன் என்ற முறையில் 
இங்குள்ள எங்கள் மக்களின் பழக்க வழக்கங்கள் அறிந்தமையால் 
உறுதிபடக் கூற இயலும்.   
**
2) "ஆபத்தான மதவாதம் கலந்த படம்" என்பது துளியும் நேர்மையற்ற 
அவதூறு. திறந்த மனதோடுஎதையும் பார்ப்பது என்ற அறிவியல் 
வழிப்பட்ட பார்வையே இல்லாமல், வித்தியாசமான ஒரு அவதூறைக் 
கூறுவதன் மூலம் கவன ஈர்ப்பைப் பெற முயலும் ஒரு மலிவான  
உத்தியே விமர்சகரின் கருத்துக்களில் வெளிப்படுகிறது.
**
3) கமல் இப்படத்தில் நாடார் சாதியைச் சேர்ந்தவராகக் காட்டப் 
படுகிறார் என்று கூறுவது கயமைத் தனமான பொய். வன்மையாகக் 
கண்டிக்கத் தக்கது.  சாதி வெறி பிடித்த மூளையில் இருந்து கழியும் 
மலம்.  
**
4)மலையாளப் படமான திருஷ்யம் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு 
ஏற்பச் சிறிதளவு மாற்றம் செய்வது பஞ்சமாபாதகம் என்கிறார் 
'விமர்சகர்'(!). இது தமிழனை மலையாளிக்கு அடிமைப் 
படுத்தும் முயற்சி. முன்பு சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை 
என்ற படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில், விஷம் குடித்த கதாநாயகன் 
பிழைத்து விடுவான் என்று இருக்கும்.ஆனால், இதை மலையாள மண்ணில் 
திரையிடும்போது, விஷம் குடித்தவன் இறந்து விடுவதாகக் காட்டினார்கள்.
மலையாளி உளவியலும் தமிழன் உளவியலும் வேறு வேறு 
என்னும்போது, அதற்கேற்பச் சிறு மாற்றங்களைச் செய்வதில் 
தவறு என்ன?  
**
5) காளைமாட்டை ஒட்டிக் கொண்டு வரும் ஒரு கிராமவாசியிடம் 
போய், நீ ஒட்டிக் கொண்டு வருவது கழுதை என்று தடால் அடியாகச் 
சொல்பனைப் போல, இப்படம் மதவாதப் படம் 
என்று சொல்வது அமைந்திருக்கிறது.  என்ன செய்ய, இப்படி 
எல்லாம் சொன்னால்தான் "முற்போக்கு"அந்தஸ்து கிடைக்கும்  
என்கிற  பார்வை படுத்தும் பாடு.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக