செவ்வாய், 14 ஜூலை, 2015

இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை என்ன?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகிய பிரதமர்களின் ஆட்சிக் 
காலத்தில், இந்தியா பொக்ரான் என்ற இடத்தில் அணு வெடிப்புச் 
சோதனைகளை நிகழ்த்தியது. (POKHRAN-I and II). இதன் மூலம் 
இந்தியா ஓர் அணு ஆயுத நாடு என்பது உலகறிந்த உண்மை 
ஆயிற்று. அப்படியானால், இந்தியாவின் அணு ஆயுதக் 
கொள்கை என்ன? கீழே காண்க.
**
INDIA's NUCLEAR WEAPONS DOCTRINE
---------------------------------------------------------
India's nuclear weapons are solely for deterrence and that India will peruse
a policy of "retaliation only."
India will not be the FIRST to initiate a nuclear first strike, but will respond
with punitive retaliation and that the decisions to authorise the use of 
nuclear weapons would be made by the Prime Minister or his designated 
successor(s).
---Released by INDIA's NATIONAL SECURITY BOARD on 17 Aug 1999------
--------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை 
----------------------------------------------------------------
இந்தியாவின் அணு ஆயுதங்கள் அச்சுறுத்தும் நோக்கம் 
மட்டுமே கொண்டவை. தாக்கப் பட்டால் திருப்பித் தாக்குவது 
என்ற கொள்கையை இந்தியா கடைப் பிடிக்கும்.
அணு ஆயுதத் தாக்குதலை முதலில் தொடுக்கும் நாடாக 
இந்தியா இருக்காது. ஆனால் தாக்கப் பட்டால், திருப்பித் 
தாக்கித் தண்டிக்கும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது 
பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு அல்லது 
அவரின் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டு.
-----தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியம், ஆகஸ்ட் 17,1999----
----------------------------------------------------------------------------------------------------
*****************************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக