வெள்ளி, 3 ஜூலை, 2015

(1) பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டு பிடித்தது யார்?
உரிமைகோரல்களும் உண்மையும்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------
இந்திய அறிவியல் மாநாடு 2015 மும்பையில் இவ்வாண்டின் 
தொடக்கத்தில் சனவரி 3 முதல் சில நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை 
அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன் பித்தகோரஸ் தேற்றத்தைக் 
கண்டுபிடித்தது இந்தியாதான் என்று கூறினார். அமைச்சரின் 
கூற்றுக்கு எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை என்பது குறிப்பிடத் 
தக்கது.
**
தமிழ்ச் சூழலில் சிலர் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்
தவர்கள் தமிழர்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கான வலுவான 
ஆதாரம் எதுவும் எவராலும் இன்றுவரை தரப்படவில்லை. 
இந்நிலையில் பெரியாரிஸ்டாக அறியப்பட்ட தோழர் மஞ்சை  
வசந்தன் அவர்கள் தமது முகநூல் பதிவில் ஒரு பழஞ்செய்யுளை 
ஆதாரமாகக் காட்டுகிறார். அதை இப்போது பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------------

ஆம். பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோணவியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:

”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கர்ணந் தானே!”

- கோதையனார்

இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

--------

எடுத்துக்காட்டு: 3,4,5 அளவுகளைக் கொண்ட முக்கோணம்.

நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.
பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்
AB^2 + AC^2 = BC^2
4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2
BC = 5 
-------மஞ்சை வசந்தன்-----------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு மஞ்சை வசந்தன் கூறும் கோதையனாரின் சூத்திரம் எல்லா பித்தகோரியன் 
எண்களுக்கும் பொருந்தவில்லை. எடுத்துக்காட்டு:
1) 8,15,17 என்கிற பித்தகோரியன் எண்களுக்கு (Pythagorian  triplets)
பொருந்தவில்லை. கர்ணம் 17.25 வருகிறது. இது தவறு. 17 என்பதே சரியான விடை.
**
2) 7,24,25 என்கிற எண்களுக்கும் பொருந்தவில்லை. கர்ணம் 24.25 வருகிறது.
இது தவறு. கர்ணம் 25 என்பதே சரியான விடை.
**
3) 9,40,41 என்கிற எண்களுக்குப்  பொருந்தவில்லை. கர்ணம் 39 வருகிறது.
41 என்பதே சரியான விடை.
*****************************************************************************************************
தொடரும் 
*********************************************************************************************************8  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக