1) இக்கட்டுரைக்கும் இதை வெளியிட்ட இணையதளத்துக்கும்
நம்பகத்தன்மை மிகவும் குறைவு. பல்வேறு சந்தர்ப்பங்களில்
வேண்டுமென்றே பொய்ச்செய்திகளை (fake news) இவர்கள்
வெளியிடுவார்கள்.
2) வானில் பறக்கும் விமானங்கள் மூலமாக, பூமியின்
வளிமண்டலத்தில், ஏரோசால்களைப் பீய்ச்சி அடிப்பதற்கு
சி.ஐ.ஏ.வும் நாசாவும் ஆதரவு அளிக்கின்றன என்று கட்டுரை
கூறுகிறது.
3) மிகவும் நுட்பமாகப் பொடி செய்யப்பட்ட துகள்களை காற்றிலோ
அல்லது ஏதேனும் ஒரு வாயுவிலோ (air or gas) கலந்து அதைப்
பீய்ச்சி அடிப்பது ஏரோசால் எனப்படும்.
**
4) புவி வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதனால் பருவநிலை
மாற்றங்கள் நிச்சயமாக ஏற்படும். இது வேளாண்மையைப்
பாதிக்கும். இதனால் உணவு உற்பத்தி குறையும். இந்த
மோசமான நிலை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக
நாசாவும் சி.ஐ.ஏ.வும் வளிமண்டலத்தில் ஏரோசால்களைப்
பெய்து நிலைமையைச் சமாளிக்க முயலுவதாகக் கட்டுரை
கூறுகிறது.
5) ஒருகாலத்தில் இவ்வாறு, செயற்கையான முறையில்
ஏரோசால்களை விண்ணில் செலுத்துவது குற்றமாகக்
கருதப்பட்டது. ஆனால் இன்று புவி வெப்பமடைதல்
காரணமாக, இவ்வாறு செய்தேனும் நிலைமையைச்
சமாளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று
இக்கட்டுரை கூறுகிறது.
**
6) இதற்காக புவிப்பொறியியலும் பருவநிலைத் தலையீடும்
(Geo engineering and climate intervention) என்ற புதிய கோட்பாடு
உருவாக்கப் பட்டுள்ளது. விண்ணில் ஏரோசால்களைச்
செலுத்தி, பருவநிலையை நாம் விரும்பியவண்ணம் மாற்றி
அமைக்க இக்கோட்பாடு உதவும்.
7) chemtrials மற்றும் contrials மூலமாக இவை செய்யப்படும்.
contrial என்பது condensation trial என்பதன் சுருக்கம். விண்ணில்
ஏரோசால்களைப் பீய்ச்சுவதன் மூலம் செயற்கையானதும்
மெலிதானதுமான ஒரு மேகத்தை உருவாக்குவதே இது.
chemtrial என்பது ரசாயனங்களை விமானம் மூலம் வானில்
செலுத்தும் முயற்சி ஆகும்.
**
8) ஏற்கனவே அமெரிக்க ஜெட் விமானங்கள் இவ்வாறு
ரசாயனங்களை விண்ணில் செலுத்துகின்றன என்ற ஒரு
குற்றச்சாட்டு இருந்தது. என்ன நோக்கத்துக்காக இவ்வாறு
விண்ணில் ரசாயனங்களைச் செலுத்துகிறார்கள் என்று
தெரியாமல் (தெரிவிக்கப் படாமல்) இருந்தது. இன்று அமெரிக்க
இராணுவமே, இத்தகைய செயல்பாடுகளுக்கு அங்கீகாரம்
அளிக்க முன்வந்துள்ளது என்று கட்டுரை மேலும் கூறுகிறது.
9) இக்கட்டுரையில் எவ்வளவு உண்மை மற்றும் எவ்வளவு பொய்
என்பதைக் கண்டறிய இயலாது. எனவே இது நம்பகத்தன்மை
அற்றது.
10) இக்கட்டுரையில் ஓரிடத்தில் அலுமினியத்தில் தோரியம்
உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.
----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக