வெள்ளி, 31 ஜூலை, 2015

(1) மும்பை குண்டு வெடிப்பு 1993: 
வழக்கு, தண்டனை, தூக்கு, படிப்பினைகள்!
--------------------------------------------------------------------
முதலில் இது குறித்த விவரங்களைப் பார்த்து விடலாம்.
1) குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள்:   12 மார்ச் 1993 வெள்ளிக் கிழமை.
2) நேரம்: மதியம் 1.30 முதல் 3.30 வரை 
3) இந்த நாள் கருப்பு வெள்ளி (BLACK FRIDAY) எனப்படுகிறது.
**
4) மொத்தம் 13 குண்டு வெடிப்புகள் நடந்தன. இவை மதியம் 
1.30 முதல் 3.30 வரையிலான இரண்டு மணி நேரத்தில், 
அடுத்து அடுத்துப் பல இடங்களில், ஒன்றன் பின் ஒன்றாக 
நடந்தன.
5) குண்டு வெடிப்பு நிகழ்ந்த காலத்தில் மகாராஷ்டிர 
முதல்வராக சரத் பவார் இருந்தார்.
**
6) மக்கள் அதிகம் கூடும் இடங்களையே இலக்காகக் கொண்டு 
குண்டுகள் வைக்கப் பட்டு இருந்தன.
7) பின்வரும் இடங்களில் குண்டுகள் வெடித்தன.
--------------------------------------------------------------------------------
1.சாவேரி பஜார் 2.செஞ்சுரி பஜார் 3.கத்தா பஜார்
4. பிளாசா திரையரங்கம் 5) சீ ராக் (sea rock) ஓட்டல் 
6) சாகர் விமான நிலையம் 7.ஏர் இந்தியா கட்டிடம் 
8.மும்பை ஸ்டாக் எக்சேஞ் கட்டிடம் 9.ஒர்லி ( Worli)
10) பாஸ்போர்ட் அலுவலகம் 11.ஜுஹு சென்டார் ஓட்டல்
12) மாஹிம் மீனவர் காலனி 13) எம்.எம் கார்ப்பொரேஷன் வங்கி 
**
8) இந்த 13 இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த குண்டு 
வெடிப்புகளில், 257 பேர் உயிர் இழந்தனர். 1400 பேர் காயம் 
அடைந்தனர். இந்த 1400இல் 800 பேர் நிரந்தர ஊனம் அடைந்தனர்.
(கை கால் துண்டிக்கப் பட்டனர்)
9) சக்தி வாய்ந்த RDX வெடிமருந்து பயன்பட்டு இருந்தது.
10) குண்டு வகை: கார் குண்டு முதலான வாகன குண்டுகள்.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
---------------------------------------------------------------------------------------------------          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக