புதன், 15 ஜூலை, 2015

திரு ரிபெல் ரவி அவர்களின் ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பற்றிய 
மிகை மதிப்பீடு உண்மை அல்ல. ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் 
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் சில நூற்றாண்டுகள் பிந்தி நிற்பவை.
ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் அதிகாரிகளின் IQ என்பது எந்தவிதத்திலும் 
OUTSTANDINGஆக இருப்பது அல்ல. சராசரி  இந்தியர்களின் IQவை 
விடச் சற்றே மேம்பட்டது; அவ்வளவுதான். இந்தக் கருத்தை 
நியூட்டன் அறிவியல் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 
கடந்த பத்தாண்டுகளாகவே எடுத்து உரைத்துள்ளன.
**
அறிவியலே படிக்காமல், அறிவியலே தெரியாமல் ஐ.ஏ.எஸ்-
ஐ.பி.எஸ் அதிகாரியாக வர முடியும் என்பது இந்தியாவில் 
மட்டுமே சாத்தியம். உண்மை இவ்வாறு இருக்க. ஐ.பி.எஸ் 
அதிகாரிகளின் IQ பற்றி பிரமிப்பில் ஆழ்வது பரிதாபத்துக்கு 
உரியது.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் இத்திரைப் படங்களின் மூலக் 
கதையான, DEVOTION OF SUSPECT X என்ற நாவலைப் 
பற்றியே பெரிதும் பேசுகிறது. ஜப்பானிய, கொரியத் 
திரைப்படங்களில், மூலக்கதையானது சிந்தாமல் 
சிதறாமல் அப்படியே படமாக எடுக்கப் பட்டுள்ளது.
அதாவது, MATHEMATICIAN versus PHYSICIST என்பதாகவே 
ஜப்பானிய கொரியப் படங்கள் அமைந்துள்ளன. 
**இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில், MATHEMATICIAN versus 
PHYSICIST என்றெல்லாம் கற்பனையில் கூட ஒரு சினிமாவை 
எடுக்க முடியாது. (ஆவணப் படம் கூட எடுக்க முடியாது).
**
எனவேதான், நியூட்டன் அறிவியல் மன்றம் மிகத் தெளிவாக
தனது பதிவில், பின்வருமாறு கூறி இருப்பதை திரு ரிபெல் 
ரவி போன்றவர்கள் காணத் தவறி விட்டார்கள்.
"இந்த நாவலின் இந்தியப் பிரதிபலிப்புகளாக திருஷ்யம் 
பாபநாசம் படங்கள் விளங்குகின்றன."
**
சூரிய ஒளி பொதுவானது. என்றாலும் அதைப் பிரதிபலிப்பதில் 
பூமியும் சந்திரனும் பிற கோள்களும் பெரிதும் வேறுபடுகின்றன.
ஏனெனில், ஒவ்வொன்றின் பிரதிபலிக்கும் ஆற்றல் 
வேறுபட்டது ஆகும். இந்த ஆற்றல், ALBEDO VALUE என்று 
அறிவியலில் வழங்கப் படுகிறது.
**
மூல நாவலும் மூல ஜப்பான் படமும், இரு பெரும் 
மூளைகளுக்கு (கணித நிபுணர் மற்றும் இயற்பியல் அறிஞர்)
இடையே நடக்கும் போராட்டத்தைச் சித்தரிப்பதாகும்.
அந்தப் போராட்டத்தை இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் 
இப்படித்தான் சித்தரிக்க முடியும். ஏனெனில், இந்தியா 
என்பது ஒரு SCIENTIFICALLY ILLITERATE COUNTRY.
**
இறுதியாக, நியூட்டன் அறிவியல் மன்றம், இந்தப் 
பதிவை, மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்,  மற்றும் 
அறிவியல் ஆர்வலர்களை மனதில் கொண்டு 
வெளியிட்டுள்ளது. ஜப்பானிய விஞ்ஞானி யுகாவா 
பற்றியும், அவரின் கண்டுபிடிப்பான மேஸான் பற்றியும் 
மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கும் 
வாய்ப்பாகவே இப்பதிவு வெளியிடப் பட்டுள்ளது.        
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக