1991, மே 21 அன்று இரவு பத்து மணிக்கு மேல், ஸ்ரீபெரும்புதூரில்
நிகழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட மரணங்களுக்குக் காரணம்
பெல்ட் வெடிகுண்டு (BELT BOMB). இந்த பெல்ட் வெடிகுண்டு
சிவராசனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் வேறு எதையும்
விட, அதி முக்கியமான கேள்வி. இதற்கு கார்த்திகேயன் குழு
எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை.
**
சென்னையில் தங்கி இருந்த சிவராசன் சென்னையில் வைத்து
இந்த பெல்ட் வெடிகுண்டைத் தயாரிக்கவில்லை என்பது
சி.பி.ஐ உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை.
இலங்கையில் இருந்தும் கொண்டுவரவில்லை என்பதும்
நிரூபிக்கப் பட்ட உண்மையே.
**
ராணுவம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த RDX
வெடிமருந்து இந்த பெல்ட் குண்டில் உள்ளது. இது சாமியார்
சந்திராசாமியால் சிவராசனுக்குத் தரப்பட்டது என்று
வாக்குமூலம் அளித்த ரங்கநாத்தை கார்த்திகேயன்
மிரட்டினார் என்பது நாடறிந்த உண்மை.
**
புலனாய்விலேயே மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு
விடை அளிக்காத புலனாய்வு எப்படிச் சரியானதாக இருக்க
முடியும்? பெல்ட் குண்டுக்கு பாட்டரி வாங்கிக் "கொடுத்த"
பேரறிவாலனுக்குத் தூக்கு. பெல்ட் குண்டையே சிவராசனுக்கு
வழங்கிய சந்திராசாமி விசாரிக்கப் படவே இல்லை! இது என்ன
நியாயம்/ இது என்ன புலனாய்வு?
**
சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன்
கூறிய பின்னாலும், அவரை இன்னும் விசாரிக்கவே இல்லையே!
எனவே, இந்தப் புலனாய்வில் மிகப் பெருங்குறை இதுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக