சனி, 25 ஜூலை, 2015

திரு அரவிந்தன், திரு சக் ரிவான் கவனத்துக்கு,
-----------------------------------------------------------------------------
மோடியும் தீஸ்தாவும் பரம வைரிகள் என்று எவரேனும் கருதினால் 
அது பரிதாபத்துக்கு உரியது. இருவருக்கும் ஒரே எஜமானர்கள்தான்;
அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இருவருக்கும் எஜமான். நாளைக்கே அமெரிக்கா கட்டளை இட்டால், இருவரும் தங்களின் எஜமான 
விசுவாசத்தைக் காட்டுவதில் ஒருவருக்கொருவர் மிஞ்சி
நிற்பார்கள்.
**
சமகால உலகில் NGO என்னும் தொண்டு நிறுவனங்களை 
எதிர்கொள்வது உலகம் முழுவதும் உள்ள மார்க்சியக் 
கட்சிகளின் முக்கியமான பிரச்சினை. NGO நிறுவனங்கள் 
முழுமையும் ஏகாதிபத்திய நிதியுடன் தங்கள் எஜமானனின் 
நலனுக்காக, அந்தந்த நாடுகளில் இயங்குபவை. மக்களை 
ஏமாற்ற இந்த NGO நிறுவனங்கள் தொடக்கத்தில் 
புரட்சி வேடம் இடுவது வாடிக்கை. இதில் அப்பாவி 
இளைஞர்கள் பலியாவதும், தங்களை அறியாமலே, 
ஏகாதிபத்திய   எடுபிடிகளாக மாறிப் போவதும், 
நாம் அன்றாடம் கண் முன்னே காணுகிற காட்சி ஆகும்.
**
தீஸ்தா அம்மையார் இன்று சில இளைஞர்களுக்கு
ஆதர்சமாக இருக்கிறார் என்பது உண்மையே. அவரைப் 
போற்றும் இளைஞர்கள், உண்மையை உணரும்போது 
தெளிவு பெறுவார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் மிக 
நீண்ட ஒரு சங்கிலித் தொடர்தான் இந்த NGO நிறுவனங்கள்.
அந்தச் சங்கிலியில் ஒரு கண்ணிதான் இந்த தீஸ்தா.
**
மார்க்சிய லெனினியக் கட்சிகளின் நிலைப்பாடு, NGOக்கள் 
என்பவை ஏகாதிபத்திய எஜமானின்  ஏவல் நாய்கள் என்பதே.
எனவே, அவர்களை அம்பலப் படுத்துவதும், முறியடிப்பதும் 
எங்களின் கடமை ஆகிறது.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக