புதன், 8 ஜூலை, 2015

மனித சமூகம் மேற்கொள்ளும் திருமண உறவு முறைகளைப் பற்றி
ஆராய்ந்து அறிந்த மானுடவியல் அறிஞர்கள் (anthropologists)
dravidian kinship  மிகச் சிறந்ததாக அறிவியல் வழிப்பட்டதாக
இருக்கிறது என்று கூறியுள்ளனர். சொந்தத்துக்குள் பெண்
எடுக்கும் வழக்கம் இருந்தபோதிலும், இதில் சில தடைகளும்
(bar) இருப்பதை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். உதாரணமாக,
சித்தப்பன் பெரியப்பன் மக்கள் தங்களுக்குள்  திருமணம்
செய்துகொள்வது இங்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்,
அது அண்ணன்-தங்கை உறவு முறை ஆகிவிடும் என்பதால்.
**
தமிழ்ச் சமூகத்தில் மற்றும் தென்னிந்திய சமூகத்தில்
அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளோர் திருமணம் புரிந்து
கொள்ள அனுமதி இல்லை. இந்த வழக்கம் நீண்ட பல
நூற்றாண்டுகளாக நடைமுறையில்  இருந்து வரும் ஒன்று;
கறாராகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் ஒன்று.
**
இந்த நடைமுறை இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் மீறப்
பட்டுள்ளது. இந்த மீறலுக்குக் காரணம் என்ன என்பதுதான்
கேள்வி. சொந்தத்தில் பெண் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
என்ற கருத்து மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாகச்
செல்வாக்குப் பெற்றுவிட்ட இக்காலத்தில், இப்படி ஒரு நிகழ்வு
(அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ள இருவர் மனம் புரிவது)
நடந்துள்ளது. இதற்குக் காரணம் பின்நவீனத்துவமே.
**
பின்நவீனத்துவம் கட்டுப்பாடற்ற கலவியை ஆதரிக்கிறது.
கலவியில் விதிக்கப்பட்டுள்ள எல்லாவிதத் தடைகளையும்
அது தகர்க்கிறது. Absolutely Free Sex என்ற கோட்பாட்டுக்காக
நிற்கிறது.  Sex-positive feminism என்ற கோட்பாட்டாளர்கள்
விரும்பி உறவு கொள்ளும் இருவருக்கிடையில் அரசோ,
சமூகமோ எவ்விதக் கட்டுப்பாட்டையும் விதிக்கக் கூடாது
என்று போராடினர். (Neither the govt nor the society should
interfere in the sexual activities between two CONSENTING individuals)
**
இருவர் சம்மதித்தால் உடலுறவு கொள்ளலாம்;
அண்ணன்-தங்கை ஆனால் என்ன? என்பதுதான் பின்நவீனத்துவம்
முன்வைக்கும் பாலியல் புரட்சி.  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக