வியாழன், 23 ஜூலை, 2015

ஜாமீனில் இருக்கும் அன்புமணி!
ஜாமீன் ரத்தாகுமா? சி.பி.ஐ முயற்சி!!
----------------------------------------------------------------
அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ தொடுத்திருக்கும் 
வழக்கு ஊழல் வழக்கு ஆகும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 
(prevention of corruption act ) பிரிவுகளில் அன்புமணி மீது 
வழக்குத் தொடரப் பட்டுள்ளது. 
**
மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள IMCHRC என்ற தனியார் 
மருத்துவக் கல்லூரியில் எவ்விதமான அடிப்படை வசதிகளோ 
தேவையான மருத்துவ உபகரணங்களோ (CLINICAL MATERIALS)
இல்லை என்பதால், இங்கு MBBS படிப்பில் மாணவர்களைச் 
சேர்க்கக் கூடாது என்று இந்திய மெடிக்கல் கவுன்சில் தடை 
விதித்து இருந்தது.
**
மேலும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஒரு நிபுணர் குழுவானது,
ஆய்வுகள் நடத்தி, இக்கல்லூரியில் MBBS படிப்பில் மாணவர்
களைச் சேர்க்கக் கூடாது என்று அறிக்கை அளித்து இருந்தது.     
**
மெடிக்கல் கவுன்சில் விதித்த தடையையும் உச்ச நீதி மன்றம் 
நியமித்த நிபுணர் குழுவின் பரிந்துரையையும் அப்பட்டமாக 
மீறி, மேற்கூறிய மத்தியப் பிரதேச தனியார் மருத்துவக் 
கல்லூரிக்கு 2008-09 கல்வியாண்டில், MBBS இரண்டாம் 
ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தார் 
அன்புமணி என்கிறது சி.பி.ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 
குற்றப் பத்திரிக்கை. அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் 
செய்து, ஊழல் புரிந்து, ஆதாயம் அடைந்தார் என்று 
சி.பி.ஐ.யின் குற்றப் பத்திரிக்கை மேலும் கூறுகிறது. 
**
இதைத் தொடர்ந்து அன்புமணியைக் கைது செய்து 
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது சி.பி.ஐ. ஜாமீனில் 
விட வேண்டும் என்ற அன்புமணியின் கோரிக்கையை 
ஏற்று டில்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
தற்போது அன்புமணி ஜாமீனில்தான் இருந்து வருகிறார் 
என்பது குறிப்பிடத் தக்கது.
**
மத்தியப் பிரதேசத்து வியாபம் ஊழலை சி.பி.ஐ விசாரிக்க 
வேண்டும் என்று அண்மையில் உச்சநீதி மன்றம் 
தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் 
அணி அணியாக போப்பால் நகருக்கு வந்து விசாரித்து 
வருகிறார்கள். அன்புமணி முறைகேடாக அனுமதி வழங்கிய 
இந்தூர் IMCHRC கல்லூரிக்கு  வியாபம் ஊழலில் முக்கிய 
பங்கு உள்ளது என்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
**
இதைத் தொடர்ந்து, அன்புமணியின் ஜாமீனை ரத்து செய்து,
அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று 
சி.பி.ஐ கருதுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில்
சி.பி.ஐ இறங்கி இருக்கிறது.
**
ஒரு கல்லூரி மட்டும் அல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட 
கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி உள்ளார் 
அன்புமணி. உத்திரப் பிரதேசத்தில் உள்ள ரோஹில்கன்ட் 
மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய 
வழக்கிலும் அன்புமணி கைது செய்யப் பட்டு, நீதிமன்றத்தில் 
ஆஜர் படுத்தப் பட்டு, ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கு 
லக்னோ நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்று, தற்போது 
டில்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு 
மாற்றப் பட்டுள்ளது. அது குறித்து அடுத்த கட்டுரையில் 
காண்போம்.
******************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக