வியாழன், 30 ஜூலை, 2015

போலியோ குழந்தைகளுக்கு  எடை குறைந்த 
ஊன்றுகோலைக் கண்டுபிடித்த அப்துல் கலாம்!
-------------------------------------------------------------------------
1993இல் ஹைதராபாத்தில் DRDOவில் பணியாற்றிக் 
கொண்டிருந்தார் கலாம். ஒரு மருத்துவ மனைக்குச் 
சென்ற கலாம், போலியோ குழந்தைகள் ஊன்றுகோலை 
ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் நடப்பதைக் கவனித்தார்.
அவர்களின் ஊன்றுகோலை வாங்கிப் பரிசோதித்துப் 
பார்த்த கலாம், அது மூன்று கிலோ எடை இருப்பதைக் 
கண்டு அதிர்ந்தார்.
**
எடை குறைவான ஊன்றுகோல் இருந்தால் மட்டுமே 
குழந்தைகள் சிரமம் இன்றி நடக்க முடியும் என்று உணர்ந்த 
கலாம் அப்படிப் பட்ட ஒரு ஊன்றுகோலை உருவாக்கினார்.
**
அதிக வலிமை கொண்டதாகவும் அதே நேரத்தில் 
எடை குறைந்ததாகவும் ( more strength with less mass) உள்ள  
ஒரு பொருள் (MATERIAL ) ஏவுகணைகளில் பயன்படுத்தப்
படுவதை நினைவு கூர்ந்த கலாம், அதே பொருளைப் 
பயன்படுத்தி, ஊன்றுகோலைத் தயாரிக்குமாறு தமது 
டீமில் உள்ள, தன்னுடன் பணியாற்றும் அருண் திவாரி 
என்ற பொறியாளருக்குக் கட்டளை இட்டார். அதற்கான 
டிசைன் உள்ளிட்ட ஆலோசனைகளைக் கூறினார் கலாம்.
**
அவ்வாறே புதிய ஊன்றுகோல் உருவாக்கப் பட்டது.
அது வெறும் 300 கிராம் மட்டுமே இருந்தது. ஆக, மூன்று 
கிலோ எடையுடன் மிகக் கனமாக இருந்த ஊன்றுகோல் 
கலாமின் கண்டுபிடிப்பால், பத்து மடங்கு எடை குறைந்து,
வெறும் 300 கிராமுக்கு வந்தது. இந்த ஊன்றுகோலுடன் 
குழந்தைகள் மகிழ்ச்சியோடு நடப்பதைக் கண்டு 
அப்துல் கலாம் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
**
(வின் டி.வி.விவாதத்தில் ( 30.07.2015, காலை 11 to 12 மற்றும் 
மறு ஒளிபரப்பு 30.07.2015 இரவு 8 to 9) நியூட்டன் அறிவியல் 
மன்றம் தெரிவித்த கருத்து.)      
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக