சனி, 25 ஜூலை, 2015

அமெரிக்க ஏகாதிபத்திய எடுபிடி 
ஃபோர்டு பவுண்டேஷன் கைக்கூலி  
தேசத் துரோகி தீஸ்தா செதல்வாத்துக்கு 
சி.பி.ஐ சிறப்பு நீதிபதி அனிஸ் கான் முன்ஜாமீன் மறுப்பு!
-----------------------------------------------------------------------------------------   
புரட்சித் தலைவி திருமதி தீஸ்தா செதல்வாத் அம்மையாரை 
உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால், உங்களை ஒரு 
புழுவுக்குச் சமமாகக் கருதுவார்கள் அவர்கள்.
யார் அந்த அவர்கள்?
**
அவர்கள்தான் போலிக் கம்யூனிஸ்ட்டுகள், போலி 
நக்சல்பாரிகள், போலி முற்போக்கு வகையறாக்கள். 
அவர்களைப் பொறுத்த மட்டில் தீஸ்தாதான் 
இந்தியாவின் லெனின்.  
**
உண்மையில் தீஸ்தா செதல்வாத் என்ற இந்த அம்மையார் 
அமெரிக்க அடிவருடி. ஃபோர்டு பவுண்டேஷன் என்னும் 
அமைப்பிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, தேசத் துரோக 
வேலைகளில் ஈடுபடுபவர். இவர் இரண்டு பெரிய NGO 
அமைப்புகளை (அரசுசாரா நிறுவனங்களை) நடத்தி வருபவர்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தமது கூந்தலை அலங்காரம்
செய்து கொண்டு, அதற்கான பில்லை (BILL), ஃபோர்டு 
பவுண்டேஷனுக்கு  அனுப்பிப் பணம் பெற்றுக் கொள்பவர்.  
**
இன்றைய இந்து ஆங்கில ஏட்டில் (THE HINDU, 25.07.2015,
பக்கம்-17) தீச்தாவின் நேர்காணல் வெளியாகி உள்ளது.
அதில் ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து தாம் பணம் 
பெற்று வருவதை ஒப்புக் கொண்டு  ஒப்புதல் வாக்குமூலம் 
கொடுக்கிறார் தீஸ்தா. கீழே பார்க்கவும்.
** 
"........ Sabrang communications, which published the monthly 'Communalism 
Combact' signed a consultancy agreement with the Ford Foundation in
2004 and 2006 to address the issues of caste and communalism........."
***
Ford Foundation deducted TDS with every instalment of consultancy fees
it paid to Sabrang Communications.
**
Activities and financial reports were submitted annual to the satisfaction of
Ford Foundation.
**
மேற்கூறிய ஆங்கிலப் பகுதி முழுவதும் தீஸ்தா அளித்த 
ஒப்புதல் வாக்குமூலங்கள். தீஸ்தாவை ஆதரிக்கும் அத்தனை 
போலிகள் முகத்திலும் கரியைப் பூசி விடுகிறார் இந்த 
ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததன் மூலம். சி.ஐ.ஏ.வால் 
வழிநடத்தப்படும் ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து நான் 
பணம் பெறுகிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார் தீஸ்தா.  
**
ஃபோர்டு பவுண்டேஷன் இந்தியாவில் புரட்சியை நடத்தாது.
NGO அமைப்புகள் மூலம் அந்நிய நாட்டு நிதி உதவி பெற்று 
இந்தியாவில் புரட்சி செய்யலாம் என்று நினைப்பவன் 
 ஒரு கிரிமினலாகத்தான் இருக்க முடியும்.
**
போலி முற்போக்கு வகையறாக்களே, பார்ப்பன ஞானியே,
 பேராசிரியர் அ மார்க்ஸ் வகையறாக்களே, தொண்டு நிறுவனப் 
புரட்சி நடத்த இருக்கும் போலி நக்சல்பாரிகளே,
உங்கள் பதில் என்ன?
******************************************************************** 
 பின்குறிப்பு: மும்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 10 வரை 
தீஸ்தாவைக் கைது செய்யத் தடை விதித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
    
       . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக