சனி, 25 ஜூலை, 2015

திரு அரவிந்தன், வார்த்தையை அளந்து பேசவும்.
NGO என்னும் அரசுசாரா  நிறுவனங்கள் ஏகாதிபத்திய 
எடுபிடிகளாய் இருந்துகொண்டு, இந்தியப் புரட்சிக்குத் 
துரோகம் இழைப்பவை என்பது பல்வேறு மார்க்சிய 
லெனினியக் கட்சிகளின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு 
சரியானதே என்று உலக வரலாறு நிரூபித்து உள்ளது.
**
இங்கு கேள்வி என்னவென்றால், NGO அமைப்புகளால் 
புரட்சிக்கு நேரிடும் கேடுகளில் இருந்து, புரட்சிகர 
அமைப்புகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 
வேண்டும் என்பதே. எனவே, துரோகிகளான NGO அமைப்புகளின் 
தலைவர்கள் அனைவரையும்  அம்பலப் படுத்தி முறியடிக்க 
வேண்டும். நாங்கள் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய-லெனினிய    
அமைப்புகளின் நிலைப்பாடு இதுவே.
**
தங்களின் குட்டிமுதலாளித்துவ அறிவின் வரம்புக்குள் 
நின்று கொண்டு இதைப் புரிந்து கொள்ள முடியாது. இது 
வெறுமனே தீஸ்தா மட்டும் சம்பந்தப் பட்டது அல்ல.
இது மிகப் பெரிய கோட்பாட்டுப் பிரச்சினை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக