வெள்ளி, 3 ஜூலை, 2015

மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும்!
ஓர் அறிவியல் விளக்கம்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் தண்டவாளத்தில்தான் 
ஓடும். ஒரே ஒரு வித்தியாசம். மெட்ரோ ரயில் இரண்டு 
தண்டவாளத்தில் ஓடும். மோனோ ரயில் ஒற்றைத் 
தண்டவாளத்தில் ஓடும்.
**
இணைகோடுகளைப் பற்றிக் கீழ் வகுப்புகளில் பாடம் எடுக்கும் 
கணித ஆசிரியர்கள், இணைகோடுகளுக்கு உதாரணமாக 
ரயில் தண்டவாளத்தைத் தான் சொல்லுவார்கள். இதன் 
விளைவாக, தண்டவாளம் என்றாலே இரண்டுதான் என்ற 
சித்திரம் நம் மனதில் பதிந்து விட்டது.
**
ஆனால், மோனோ ரயில் என்பது (single rail) ஒற்றை 
இரும்புக் கம்பியில், ஒற்றைத் தண்டவாளத்தில் ஓடும்.
இந்தியாவின் முதல் மோனோ ரயில் மும்பையில் 
பிப்ரவரி 2014 முதல் செயல்பட்டு வருகிறது. பிற இந்திய 
நகரங்களிலும் விரைவில் செயல்படத் தொடங்கும்.
**
மெட்ரோ ரயில் (அல்லது புறநகர் மின்சார ரயில் அல்லது 
எக்ஸ்பிரஸ் ரயில்) தன்  சக்கரங்களால் தண்டவாளத்தில் 
ஓடும். சக்கரங்கள் சுழலச் சுழல, இடப்பெயர்ச்சி நடைபெறும்.
The displacement is caused by the rotation of the wheels over the rails).
**
மோனோ ரயில் என்பது "காந்த அந்தரத் தூக்கு" (magnetic 
levitation technology) என்ற தொழில்நுட்பத்தில் இயங்குவது.
உங்கள் உள்ளங்கையில் ஒரு ஆப்பிள் பழம் இருப்பதாக 
வைத்துக் கொள்ளுங்கள். திடீர் என்று அந்த ஆப்பிள், உங்கள் 
உள்ளங்கையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அந்தரத்தில் 
நிற்பதாகக் கற்பனை செய்யுங்கள். இவ்வாறு ஒரு பொருள் 
ஒரு குறிப்பிட்ட உயரத்தில், எந்தவித ஆதாரமும் இன்றி 
(without any support) அந்தரத்தில் நிற்பதற்குப் பெயர்தான் 
லெவிட்டெஷன். இந்த லெவிட்டேஷன் காந்தத்தின் மூலம் 
நடந்தால், அது மாக்னெடிக் லெவிட்டேஷன் ஆகும். இங்கு 
கண்ணுக்குத் தெரியாத காந்தப் புலம் ஆதாரமாகச் 
செயல்படுகிறது.
**
நியூட்டனின் ஈர்ப்புவிசை விதியின்படி, எந்த ஒரு பொருளும் 
அந்தரத்தில் எவ்வித ஆதாரமும் இன்றி நிற்க முடியாது. மேலே 
போன பொருள் ஈர்ப்புவிசை காரணமாக கீழே வந்துதான் 
ஆக வேண்டும். இதைத் தவிர்க்க, மோனோ இரயிலில் 
காந்தங்கள் மூலமாக, ஒரு தூக்கு விசை (lifting force)
செயல்படுகிறது. இது ஒரு மேல்நோக்கிய விசை ஆகும்.
இது புவியீர்ப்பு விசையால் ஏற்படும் gravitational accelerationஐ 
சமன் செய்து விடுகிறது. இதனால் ரயில் அந்தரத்தில் 
பறக்கிறது. அதாவது பறப்பது போல் தோன்றுகிறது.
**                 
மோனோ ரயில், மெட்ரோ ரயில் இவ்விரண்டில் எது சிறந்தது?
இரண்டுமே சிறந்தவைதாம். சென்னை போன்ற பெருநகரங்
களுக்கு மெட்ரோ ரயில் பெரிதும் பொருத்தம் உடையது.
திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை, மதுரை போன்ற 
சிறு நகரங்களுக்கு மோனோ ரயிலே மிகவும் பொருத்தமானது.
**
மோனோ ரயிலில் நான்கைந்து பெட்டிகளுக்கு மேல் இணைக்க 
முடியாது.குறைவான அளவு பயணிகளை மட்டுமே ஏற்றிச் 
செல்ல முடியும். மெட்ரோ ரயில் பெரிதானது. இதில் ஆயிரத்துக்கு 
மேல் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இரண்டுக்கும் 
இடையிலான பிரதான வேறுபாடு "ஏற்றிச் செல்லும் 
பயணிகளின் எண்ணிக்கை"யே.
****************************************************************        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக