ராணுவ அமைச்சரின் முட்டாள்தனமான பேச்சும்
MAD POLICY எனப்படும் பரஸ்பர நாசக் கோட்பாடும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா முகமது ஆசிஃப், ‘‘எங்களிடம் உள்ள
அணு ஆயுதங்கள் வெறுமனே பார்வைக்காக மட்டும் வைக்கப்படவில்லை.
அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம்"என்று பேசி இருக்கிறார்.

ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதங்களை
பயன்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
(தகவல் ஆதாரம்: WEBDHUNIA இணைய ஏடு, ஜூலை 8, 2015, 18:22 IST)
**
உலகில் ஏழு நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. அவை:
1)அமெரிக்கா 2) ரஷ்யா 3) சீனா 4) இங்கிலாந்து 5) பிரான்சு 6) இந்தியா
7)பாகிஸ்தான். போட்டி போட்டுக் கொண்டு அணு ஆயுதங்களைத் தயாரித்து
வந்த நாடுகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தயாரிப்பை நிறுத்திக் கொண்டு
விட்டன.
**
காரணம் என்ன? MAD POLICY எனப்படும் கோட்பாட்டை அணுஆயுத நாடுகள்
அனைத்தும் ஏற்றுக் கொண்டு விட்டன. MAD என்றால் MUTUALLY ASSURED
DESTRUCTION என்று பொருள். பரஸ்பர நாசம் நிச்சயம் என்று பொருள்.
**
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்திய நாடுகள், அதன் பிறகு,
அணு ஆயுதங்களை அதிவேகமாக இலக்கு நோக்கிச் செலுத்த வல்ல
ஏவுகணைத் தயாரிப்பில் இறங்கின. இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்தில்
உலக அளவில் மிகவும் முன்னேறிய நாடு நம் இந்தியா. இதில்
பாகிஸ்தான் நம்மை விட, ஆயிரம் மடங்கு பின்தங்கி நிற்கிறது.
**
இஸ்லாமாபாத் நகரில் இருந்து அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு
புறப்படும் ஒரு ஏவுகணை, இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே,
அந்த ஏவுகணையைத் தாக்கித் தகர்த்து, பாக்கிஸ்தான் எல்லைக்குள்ளாகவே
அதை விழ வைக்கிற ஏவுகணைத் தொழில்நுட்பம் இந்தியாவில்
உள்ளது. இதை உலகமே அறியும்; குறிப்பாக பாகிஸ்தானின் விஞ்ஞானிகளும்
அறிவார்கள்.
**
உண்மை நிலை இப்படியிருக்க, பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர்
தமது பொறுப்பற்ற மடத்தனமான பேச்சால், இருநாட்டுக்கும் இடையில்
வீண் பதட்டத்தை உண்டாக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்கு
உரியது.
**************************************************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக