வியாழன், 30 ஜூலை, 2015

குட்டி முதலாளித்துவக் குற்றச்சாட்டுக்களும் 
அவற்றின் முதுகெலும்பை முறிக்கும் பதில்களும்!
------------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
தமது 83 ஆண்டு கால வாழ்வில், ஐந்து ஆண்டு காலம் 
ஜனாதிபதியாக இருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால், 
தம் வாழ்நாள் முழுவதும் டாக்டர் கலாம் ஒரு 
விஞ்ஞானியாகவே இருந்தார். எனவே அவரை ஒரு 
விஞ்ஞானியாகவே கருதி மதிப்பீடு செய்ய வேண்டும்.
**
அவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அல்ல.
சமூக அரசியல் இயக்கம் எதையும் அவர் நடத்தவில்லை.
அவர் அரசியல்வாதியே அல்ல. அவரை அரசியல்வாதிகளை 
அளக்கும் அளவுகோலைக் கொண்டு அளப்பது மிகப் பெரிய 
தவறு மட்டுமல்ல அறிவியலுக்கு எதிரான செயலும் ஆகும்.
**
ஒரு சுவரின் நீளத்தை அளக்க வேண்டும் என்றால், அதை 
இன்ச் டேப் (inch tape) கொண்டு அளக்க வேண்டும். எடைக் 
கல்லும் தராசும் கொண்டு நீளத்தை அளக்க முடியாது.
அது அதற்குப் பொருத்தமான கருவியைக் கொண்டு 
அது அதை அளக்க வேண்டும். எனவே ஒரு விஞ்ஞானியை 
விஞ்ஞானிக்குரிய அளவுகோலைக் கொண்டு அளக்க வேண்டும்.
**   
கலைஞரை எவரும் காலை பத்து மணிக்கு விமர்சித்தால்,
பன்னிரண்டு மணிக்கே அவர் மறுப்புத் தருவார். ஜெயலலிதா,
மோடி, சோனியா ஆகிய எந்த அரசியல் தலைவரையும் 
நீங்கள் விமர்சித்துக் கருத்து தெரிவித்தால், அவர்கள் 
உடனே பதில் தருவார்கள். ஏனெனில் அவர்கள் அரசியல்வாதிகள்.
**
ஆனால், கலாம் அவர்கள் அரசியல்வாதி அல்ல. நீங்கள் 
என்னதான் அவரை விமர்சித்தாலும், அவர் பதில் தர 
மாட்டார். ஆக, அரசியலைப் பொறுத்த மட்டில் அவர்
ஒரு நிராயுதபாணி. அவரை அரசியல்வாதியாகக் கருதி 
அவர் மீது விமர்சனம்(!!!)  என்ற பெயரில் அவதூறுகளைப்  
பொழிவது கோழைத்தனம் மட்டுமல்ல முட்டாள் தனமும் 
ஆகும்.
**
ஆனால், குட்டி முதலாளித்துவத் தொழுநோய்ச் சிந்தனை 
உடையவர்கள், டாக்டர் கலாம் அவர்களை அரசியல்வாதியை 
அளப்பது போல் அளக்கிறார்கள். இது மடமை மட்டுமல்ல 
கயமையும் கூட. தொழுநோய் என்பது உணர்ச்சியைக் 
கொன்று விடும். தங்கள் கையில் இருப்பது அரசியல்வாதியை 
அளக்கும் அளவுகோல் என்ற பிரக்ஞையே (உணர்ச்சியே)
குட்டி முதலாளித்துவத் தொழுநோயாளிகளுக்கு 
இருப்பதில்லை. காரணம், அவர்களின் மூளையில் 
பீடித்துள்ள தொழுநோய்.   
**
கங்கையைத் தூய்மை செய்ய கலாம் என்ன செய்தார்?
காவிரிப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கண்டார்? என்ற 
கேள்விகளைக் கலாமிடம் கேட்கிறார்கள் தொழுநோயாளிகள்.
கங்கையைத் தூய்மை செய்யம் பொறுப்பு உமாபாரதியிடம் 
கொடுக்கப் பட்டுள்ளது. காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு 
காண்பது கலைஞர்-ஜெயலலிதாவின் பொறுப்பு.
கலாம் என்ன தமிழ்நாட்டு முதல்வராகவா  இருந்தார்,
அவரிடம் கேட்பதற்கு.
** 
ஆக, ஒரு விஞ்ஞானியாக, டாக்டர் கலாமின் பாத்திரத்தை 
ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற ரிசல்ட் மிகவும் 
பாசிட்டிவ் ஆக உள்ளது. ஒரு தலைமுறையையே 
கலாம் பாதித்தார். அத்தலைமுறையைச் சார்ந்த 
மாணவர்கள்,  இளைஞர்களிடம் அவர் சக்தி வாய்ந்த 
தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐம்பது கோடி இளைஞர்களுக்கு 
அவர் ஆதர்சமாக இருந்தார்.
**
 இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் அ றிவியல் உளப்பாங்கை 
மாணவர்களிடம் ஏற்படுத்தினார். உலகில் வேறெங்கும் 
ஒரு விஞ்ஞானியின் பெயர் இவ்வளவு ஆவேசத்துடன் 
கோடிக்கணக்கான மாணவர்களால் சுவீகரிக்கப் 
பட்டதில்லை என்று வரலாறு கூறும் அளவுக்கு, அவர் 
மாணவர்கள்-இளைஞர்களால் சுவீகரித்துக் கொள்ளப் 
பட்டார். பரந்துபட்ட மக்களுக்கு அறிவியலின் மீது 
நாட்டத்தை ஏற்படுத்தினார்.
**
  **********************தொடரும் ********************
பின்குறிப்பு:
-------------------
குட்டி முதலாளித்துவத் தொழு நோயாளிகளின் 
பிற்போக்கான குற்றச் சாட்டுகளின் முதுகெலும்பை 
முறிக்கும் பதில்கள் தொடரும்!
***********************************************************************  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக