புதன், 29 ஜூலை, 2015

1) கம்யூனிச வேடம் தரித்து நிற்கும் போலிகள் முன்வைக்கும் 
வலுவற்ற வாதம்தான் இது. இது குட்டி முதலாளித்துவக் கருத்து.
2) அணுஉலைகள் என்பவை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் 
போக்கில்,மனித குலம் கண்டு பிடித்தவை. உற்பத்திச் சக்திகளின் 
வளர்ச்சியை எதிர்ப்பது எப்படி மார்க்சியம் ஆகும்?
**
3) மங்கள்யான் அரசிடம் (ஆளும் வர்க்கத்திடம்) இருக்கிறது 
என்பதற்காக, அதை எதிர்ப்போமா?
4) ஹிக்ஸ் போசான் துகள் ஆராய்ச்சி என்ன பாட்டாளி 
வர்க்கத்தின் தலைமையிலா நடந்து கொண்டிருக்கிறது?
**
5) 2G, 3G அலைக் கற்றைகள் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் 
படைக்குழு வசமா உள்ளன?
**
6) யார் கையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பது  
மார்க்சியக் கருத்து அல்ல. ஆளும் வர்க்கத்திடம் இருக்கும் 
அரசியல் அதிகாரத்தை, பாட்டாளி வர்க்கம் அப்படியே 
கைப்பற்றிக் கொள்வதுதான் புரட்சி. புரட்சி வெற்றி அடைந்து 
அதிகாரம்கம்யூனிஸ்ட்டுகளிடம் வந்த பின், ஆளும் வர்க்கம் 
வைத்திருக்கும் அத்தனையும் பாட்டாளி வர்க்கத்திடம் 
வந்து விடும்.
**
7) பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் வரை, உற்பத்திச் 
சக்திகளை வளர விடாமல் எதிர்க்க வேண்டும் என்பது 
எப்படி மார்க்சியம் ஆகும்?     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக