ஞாயிறு, 26 ஜூலை, 2015

தீஸ்தா பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தை!
---------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம், ஒரு கட்சி, ஒரு தலைமை, அதன் பின்னே 
அணிதிரளும் மக்கள் என்று இருந்த சமூக-அரசியல் நிலைமையை 
முற்றிலுமாக மாற்றி விட்டது பின்நவீனத்துவம். ஆயிரம் தத்துவம்,
ஆயிரம் அமைப்புகள், ஆயிரம் தலைவர்கள் என்பதாக 
சமூக-அரசியல் நிலையை மாற்றி விட்டது பின்நவீனத்துவம்.
**
மார்க்சியத்தின்கீழ் அணிசேர  வேண்டிய மக்களை,
துண்டு துண்டாக உடைத்து, பகுதி பகுதியாகப் பிரித்து
மக்களின் ஒற்றுமையை சுக்குநூறாகச் சிதறடித்து விட்டது 
பின்நவீனத்துவம். வர்க்க அரசியலைக் கீழே தள்ளி,
அடையாள அரசியலை மேலாகச் செய்தது பின்நவீனத்துவம்.
**
அணு உலையை எதிர்ப்பதற்கு ஒரு தலைவன், அணைக்கட்டை 
எதிர்ப்பதற்கு ஒரு தலைவன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 
ஒரு தலைவன், மதவெறியை  எதிர்ப்பதற்கு ஒரு தலைவன்,
இப்படி எல்லாத் தலைவர்களுக்கும் பின்னால்  NGOக்கள் 
என்று அரசியல் களத்தை COMPARTMENTALISE செய்து விட்டது 
பின்நவீனத்துவம்.
**
இவ்வாறு பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தைகள்தான் 
NGO தலைவர்களான தீஸ்தாவும் உதயகுமாரும். இந்தப் 
பின்நவீனத்துவத்தையே பெற்றெடுத்த பிதாமகன்தான் 
அ மார்க்ஸ். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று 
சும்மா இருக்க முடியாது. எய்தவன் அம்பு எல்லாவற்றையும் 
சேர்த்து நொறுக்காமல் மார்க்சியத்துக்கு எதிர்காலம் 
இல்லை.
**
"NGOகளை எதிர்க்கிறோம்; ஆனால் தீஸ்தாவை ஆதரிக்கிறோம்" 
என்ற  கோட்பாடு சரியானதல்ல.
"முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம்; ஆனால் அம்பானியை 
ஆதரிக்கிறோம்"என்று சொன்னால் அது ஞாயமா/ சரியா?
அது போல்தான் இதுவும்.
**
பின்நவீனத்துவத்தை தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயைப்
போல் பரப்பிய   அ மார்க்சுக்கு மன்னிப்பே கிடையாது.
--------------------------------------------------------------------------------------------

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக